மழைக்காலத்தில் உங்கள் துணிகளில் படக்கூடிய சேறு சகதி கறைகளை சுலபமாக நீக்குவது எப்படி?

cloth4

மழைக் காலத்தில் வெளியே சென்றாலும் சரி, அல்லது குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியே சென்றாலும் சரி, துணியில் படிக்கக்கூடிய தேவையில்லாத கறைகளின் மூலம் நமக்கு பிரச்சனை தான். அதுவும் அழுக்கு தெரியக்கூடிய வெள்ளை நிற துணி, மஞ்சள் நிறத் துணிகளில் கறை படிந்தால், கறை நீங்கினாலும் அந்த அடையாளம், அந்த இடத்தை விட்டுப் போகாமல் பளிச்சென்று வெளியே தெரியும். உங்கள் வீட்டில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடி துணிகளை அழுக்கு செய்து வந்தாலும் சரி அல்லது மழை காலங்களில் சேறு படிந்த கறையாக இருந்தாலும் சரி அதை நீக்க சுலபமான சில வழிமுறைகளைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே கறை படிந்த துணிகளை, வீட்டிற்கு வந்த உடனேயே அந்த கரையை நீக்க முயற்சி செய்ய வேண்டும். அதாவது கறையான அழுக்கு படிந்த, துணிகளை தூக்கி, அழுக்கு கூடையில் போட்டு விட்டு, ஒரு வாரம் கழித்து துவைத்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைக்கக்கூடாது. கறை காய்ந்து விட்டால் அதை நீக்குவது ரொம்பவும் கடினமாக இருக்கும்.

முதலில் கறை படிந்த இடத்தில் சுடு தண்ணீரை நன்றாக தெளித்து ஊற விட்டு விட வேண்டும். அதன் பின்பு உருளைக்கிழங்கு சாறு பிழிந்து எடுத்து, அந்த கறைகளின் மீது ஊற்றி, 10 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். அப்படி இல்லை என்றால் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, உருளைக்கிழங்கை அந்த கரையின் மேல் வைத்து நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும்.

potato1

இப்படி செய்து விட்டு அதன் பின்பு, சோப்பு போட்டு துணி துவைத்தால் கறை சுலபமாக நீக்கிவிடும். உருளைக்கிழங்கு சாறு எடுப்பது ஒன்றும் சிரமம் கிடையாது. உருளைக்கிழங்கை நன்றாக துருவி விட்டு மிக்சியில் போட்டு அரைத்து பிழிந்து எடுத்தாலே போதும் சாரு வந்துவிடும்.

- Advertisement -

இரண்டாவதாக எலும்மிச்சம் பழத்தை கறை உள்ள இடத்தில் தேய்த்தால் கறை சுலபமாக நீக்கிவிடும். எலுமிச்சம்பழம் இல்லாதவர்கள் வினிகரை கொஞ்சமாக சூடுபடுத்தி கறையின் மீது ஊற்றி தேய்த்தாலும் காறை முழுமையாக நீங்கிவிடும். விடாப்படியாக இருக்கும் கறை என்றால், அதை நீக்க கடைகளில் துணிகளை துவைக்க பயன்படுத்தும் சோடாஉப்பு என்று கேட்டு வாங்க வேண்டும்.

strain

இந்த சோடா உப்பை கொஞ்சமாக எடுத்து கறை படிந்த இடத்தில் மீது தூவி தேய்த்தாலும் கறை நீங்குவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. கறையை நீக்குவதற்கு எந்தப் பொருளை நீங்கள் பயன்படுத்தினாலும் சரி, 15 நிமிடத்திற்குள் சோப்புத் தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து மீண்டும் அலசி உடனடியாக வெயிலில் உலர விட வேண்டும். சில கறைகள் ஈரமாக இருக்கும் போது நமக்குப் புலப்படும். துணிகள்  வெயிலில் நன்றாக காய்ந்ததும் அந்த கறை கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த 3 பொருட்களை சேர்த்து நில வாசப்படியில் கட்டி தொங்க விட்டால் போதும். கண்ணுக்குத் தெரியாத கண் திருஷ்டி, கெட்ட சக்தி, தரித்திரம் இந்த 3 நம் வீட்டு வாசலுக்குள் நுழைய முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.