அவருடன் ஆடிய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த இடத்தில் இறங்கினால் தோனி வெடித்து சிதறும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் – ரெய்னா

raina

கடந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதம் விளாசி தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் தனது கடைசி தொடரில் தொடர்நாயகன் விருதினையும் தட்டி சென்றார்.

ms

தோனியின் இடத்தினை அடிக்கடி மாற்றி மாற்றி அமைக்கின்றனர் தேர்வுக்குழுவினர். ஆனால், எந்த இடத்தில் இறங்கினாலும் என்னால் விளையாட முடியும் என்று தோனி கூறினார். அதைப்போன்று எந்த இடத்தில் இறங்கினாலும் தொடர்ந்து கடைசி வரை விளையாடி அணியினை வெற்றிக்கு அழைத்து செல்கிறார் தோனி. மேலும், பல ஆண்டுகளாக பெஸ்ட் பினிஷர் என்ற பெயரினையும் தன வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தோனி இறங்க வேண்டிய இடம் குறித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் : தோனியுடன் நான் பல போட்டிகளில் விளையாடி உள்ளேன். அவர் அனைத்து போட்டிகளிலும் வெற்றிகரமாக முடிக்கவே விளையாடுவார். இதனை பல போட்டிகளில் அவர் செய்துள்ளதை நாம் நிறைய தருணங்களில் பார்த்துள்ளோம்.

raina 2

மேலும், அவர் 4 இடத்தில் இறங்கினால் பந்துகளை கணிக்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டு பின்னர் அபாரமான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்துவார். அவருடைய ஆரம்ப கால கிரிக்கெட்டில் அதனை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்ற ஆட்டத்தினை தற்போதும் அவரால் வெளிப்படுத்த முடியும். எனவே, அவரை உலகக்கோப்பை போட்டிகளில் 4ஆம் இடத்தில் களமிறக்கலாம் என்று ரெய்னா தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்கலாமே :

ட்ரென்ட் போல்ட் பேட்டிங் செய்யும் போது திணறியதை கண்டு குலுங்கி சிரித்த ரோஹித் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்