ட்ரென்ட் போல்ட் பேட்டிங் செய்யும் போது திணறியதை கண்டு குலுங்கி சிரித்த ரோஹித் – வீடியோ

boult

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

kuldeep

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்நிலையில்,நேற்று நடந்த போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர் போல்ட் 36ஆவது ஓவரை வீசிய சாஹல் பந்துவீச்சில் தொடர்ந்து திணறினார். இதை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரோஹித் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார். இந்த பதிவு இப்போது வீடியோ வாக வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக :

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி 26ஆம் தேதி பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை பெற முயற்சிக்கும் என்று நமபலாம்.

இதையும் படிக்கலாமே :

ரிஷப் பண்டை கிண்டல் செய்து ஐ.சி.சி பதிவு செய்த ட்வீட். ரசிகர்கள் அதிகம் ரசித்த பதிவாக மாறியுள்ளது – ட்வீட் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்