உலகக்கோப்பை தொடரில் நான் தேர்வாகமாட்டேன் என்று எனக்கு முன்பே தெரியும். என்றாலும்,இரண்டாவது முறை உலககோப்பையை கையில் ஏந்த ஆசைப்படுகிறேன் – இந்திய வீரர்

raina-1

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

indian-team

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் தான் இடம்பெறமாட்டேன் என்பது எனக்கு முன்பே தெரியும் என்று இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில் : கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலககோப்பையை வென்றது. அந்த அணியில் நான் இடம்பெற்றதை என்னால் மறக்கமுடியாது. மேலும், உலககோப்பையை கையில் ஏந்திய அந்த தருணம் என்வாழ்நாளின் சிறப்பான தருணம் என்றும் தெரிவித்தார்.

Raina

மேலும், இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் முழுபலத்துடன் உள்ளது. இருப்பினும் எனக்கு ஒரு ஆசையே அது என்னவென்றால் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை என்கைகளில் ஏந்த வேண்டும் என்பதே என் விருப்பம் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : இந்திய மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த அசிங்கம். இதுதேவையா உங்களுக்கு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்