நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதே பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். நம்மை போல நம்முடைய பிள்ளைகள் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்றும் யோசிப்போம். இதற்காகவே ஆரோக்கியமாக இருக்கும் நேரங்களில் நன்றாக உழைத்து பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டால் முடியாத காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும் என்று பலரும் யோசிப்பார்கள். இதற்காக பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். பலரும் இதற்காக கஷ்டப்படுவதும் உண்டு. சிலருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்கள் நினைத்தது போல வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆவணி மாதத்திலும் கடைசி நாளான திங்கட்கிழமை அன்று எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் ராஜ யோகம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ராஜ யோகம் கிடைக்க வழிபாடு
ராஜ வாழ்க்கை என்பதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரிய வாழ்க்கையாக திகழ்கிறது. இந்த வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்து விடாது. அதற்காக பெரிதும் கஷ்டப்பட வேண்டும். உழைக்க வேண்டும். எப்படி கஷ்டப்பட்டாலும் உழைத்தாலும் பலருக்கும் அவர்கள் நினைத்தது போன்ற வாழ்க்கை அமையாது. அப்படி அவர்கள் நினைத்தது போன்ற வாழ்க்கை அமைய வேண்டும் என்றாலோ அவர்களுடைய கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்கு தெய்வத்தின் அருள் என்பது வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளை பெறுவதற்கும் கஷ்டத்திற்கு ஏற்ற பலனை பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மாதத் தொடக்கம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் தான் ஒவ்வொரு மாத இறுதியும் முக்கியமான ஒன்றாக திகழ்ந்தது. அதிலும் குறிப்பாக இந்த ஆவணி மாதத்தின் கடைசி நாள் என்பது மிகவும் விசேஷ கரமான நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாள் செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது அந்த நாளில் மாலை ஆறு மணிக்கு மேல் நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு சூட்சமமான தீப வழிபாட்டை செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்றும் ராஜா யோக வாழ்க்கை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தீப வழிபாட்டை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப வில்வ இலையை பரப்பிக் கொள்ள வேண்டும். வில்வ இலைகளுக்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கை சுற்றி மூன்று இடங்களில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அதில் இரண்டு பஞ்சுத் திரிகளை ஒன்றாக இணைத்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபமானது குறைந்தது இரண்டு மணி நேரமாகுது எரிய வேண்டும். அதாவது ஆறு மணிக்கு தீபம் ஏற்றினால் எட்டு மணி வரை எரிய வேண்டும். இப்படி எரிந்து முடித்த பிறகு இதை குளிர வைத்து அப்படியே அன்று இரவு முழுவதும் பூஜை அறையிலே இருக்கட்டும். மறுநாள் காலையில் விளக்கை எடுத்து எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். வில்வ இலைகளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி ஆவணி மாதத்தின் கடைசி நாள் நாம் செய்யக்கூடிய இந்த தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி ராஜ யோகமான வாழ்க்கை தர உதவும்.
இதையும் படிக்கலாமே: காரிய வெற்றிக்கு, வெற்றிலை பரிகாரம்
இந்த எளிமையான தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.