நன்மைகள் பலவற்றை ஏற்படுத்தும் ராஜராஜேஸ்வரி ஸ்லோகம்

rajarajeswari-compressed

இன்பமும், துன்பமும் கலந்தது தான் இல்லற வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் அனைவருக்குமே தங்களின் குடும்பத்தின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். ஆனால் பலரின் குடும்பத்திலும் பொருளாதார சிக்கல்கள், குழந்தைகள் கல்வியில் பின் தங்குதல், குடும்ப அங்கத்தினர்கள் சிலருக்கு தீராத நோய்கள் போன்றவை ஏற்பட்டு அனைவருக்குமே மிகுந்த சிரமத்தை தருகின்றன. இவை அனைத்தையும் போக்கும் ராஜ ராஜேஸ்வரி ஸ்லோகம் தான் இது.

ராஜ ராஜேஸ்வரி ஸ்லோகம்

அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி
காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி
ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ
வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ
கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ
ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா
வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா
சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா
மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா
காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா
ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

- Advertisement -

அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ
யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத்
அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம்
அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

அகிலம் அனைத்தையும் ஆளும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னையை போற்றும் ஸ்லோகம் இது. காலையில் குளித்து முடித்ததும் வீட்டில் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்பாள் படத்திற்கு பூக்களை சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி மனமொன்றி இந்த ஸ்லோகத்தை துதித்து வந்தால் வீட்டில் இருக்கும் பொருளாதார கஷ்டங்கள் தீரும். குழந்தைகள் கல்வியில் சிறப்பார்கள். உடல், மனம் சம்பத்தப்பட்ட நோய்கள் தீரும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சூழல் உருவாக தொடங்கும்.

உலகத்திற்கெல்லாம் தாயானவளே, பார்வதி , உமா, காளி என பல பெயர்களில் அழைக்கப்படுபவளே, நீயே அனைத்திற்கும் மேலானவள். அரக்கர்கள் பலரை வென்று வெற்றியை பறைசாற்றும் வீரசிம்மாசனத்தில் அமர்ந்து, அனைத்து தேவர்களும் வழிபடும் தெய்வமாக இருக்கும் நீயே ராஜராஜேஸ்வரி தெய்வமாகிறாய். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் ரூபமாக இருக்கின்றாய். சகல கலைகளையும் மாலையாக கொண்டவளே, வழிபடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் போக்கும் ராஜராஜேஸ்வரி தாயே உன்னை வாங்குகிறேன் என்பதே இந்த ஸ்லோகத்தின் சுருக்கமான பொருளாகும்.

இதையும் படிக்கலமே:
அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பன் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rajarajeshwari slokam in Tamil. It is also called as Rajarajeshwari slogam in Tamil or Rajarajeshwari mantra in Tamil or Rajarajeshwari manthiram in Tamil