விநாயகரின் அரச இலையை இப்படி செய்தால் வீட்டிலிருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் நீங்கி அதிர்ஷ்டம் தரும் ராஜயோகம் பெறலாம் தெரியுமா?

arasa-ilai-vinayagar
- Advertisement -

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த அரசமரம் விநாயகரின் ஸ்வரூபம் கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு இலையிலும் விநாயகரின் அம்சம் இருக்கும். அத்தகைய அரச மர இலையை கொண்டு அமாவாசை தோறும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது குடும்பத்தில் இருக்கும் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் வெளியேறி நல்ல ஆற்றல்கள் பெருகும். இதனால் அதிர்ஷ்டம் தரும் ராஜயோகம் பெறலாம் என்கிறது சாத்திரம். அத்தகைய பரிகாரத்தை முறையாக எப்படி நம் வீட்டிலேயே எளிமையாக செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

amavasai

ஒவ்வொரு அமாவாசையிலும் பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி அதிகரித்து காணப்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் உண்மை தான். எனவே எந்த ஒரு பரிகாரத்தையும் அமாவாசையில் செய்வது அதீத பலன்களை கொடுக்கும் என்பார்கள். அதே போல இந்த பரிகாரத்தையும் அமாவாசையில் செய்ய வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வுகள் வெளியேறிவிடும் என்பது நியதி. எனவே அமாவாசை தோறும் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வரலாம்.

- Advertisement -

தேவ கனி என்று சொல்லப்படும் எலுமிச்சை பழத்திற்கு கெட்ட அதிர்வுகளையும் உள்வாங்கும் சக்திகள் உண்டு. அதனால் தான் அதனை வசியம் செய்வதற்கும், பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்களை செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய தாம்பூல தட்டை எடுத்துக் கொண்டு அதனை சுற்றிலும் 9 அரச இலைகளை அழகாக அடுக்கி வைக்க வேண்டும். அரச மரத்திலிருந்து அரச இலைகளை பறிக்கும் பொழுது விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு பறியுங்கள். இப்படி தட்டை சுற்றிலும் காம்பு உட்புறமாகவும், இலை வெளிப்புறமாகவும் தெரியும்படி அடுக்கி வையுங்கள்.

poovarasan-leaf

பின்னர் அதன் நடுவே ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை போட்டுக் கொள்ளுங்கள். பச்சரிசிக்கு மேலே கெட்ட அதிர்வலைகளை உள்வாங்கும் ஒரு எலுமிச்சை கனியை எடுத்து வையுங்கள். இப்போது ஒவ்வொரு இலையிலும் அரகஜா என்று சொல்லப்படும் தெய்வீக சக்தி உள்ள மை ஒன்றை வலது கை மோதிர விரலால் எடுத்து நடுப்பகுதியில் வைக்க வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அரகஜா என்பது கோவில்களில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு அற்புத தெய்வீக பொருளாகும். இதனை தினமும் நெற்றியில் இட்டு கொள்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான். இதில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய அற்புத சக்தி உண்டு. எனவே இந்த மையை அரச இலையில் வைக்கும் பொழுது வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய அகல் விளக்கு ஒன்றில் நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். அதன் முன்னே நீங்கள் தயாரித்து வைத்துள்ள இந்த தட்டை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வழக்கம் போல தூப, தீப ஆராதனைகள் காண்பித்து கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல்களை பிரார்த்தித்துக் கொள்ளலாம். அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதனை அமாவாசை மாலையிலிருந்து இரவு முழுவதும் அப்படியே பூஜை அறையில் விட்டு விடுங்கள்.

lemon

மறுநாள் அதனை அப்படியே ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அரிசி, எலுமிச்சை அத்தனையும் சேர்த்து யாருடைய கால்களிலும் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விடலாம். நீர்நிலைகளில் போட முடியும் என்றால் எலுமிச்சை கனியை இரண்டாக வெட்டி நீர்நிலையில் அப்படியே விட்டு விடுங்கள், இது இன்னும் நல்ல பலனை கொடுக்கும். அமாவாசை தோறும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் வீட்டில் இருக்கும் நல்ல அதிர்வுகள் அதிகரிக்க துவங்கும். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும். ராஜயோகம் உங்களைத் தேடி ஓடி வரும்.

- Advertisement -