வயதான பின்பும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்

ராஜ்மாவின் பயன்கள்
வட இந்திய மாநிலங்களில் அதிக அளவில் பயன்படுத்தி வரப்பட்ட பொருளாக இருந்தது இந்த ராஜ்மா. ஆனால் தற்சமயம் சில தென்னிந்திய மாநிலங்களில் உள்ளவர்கள் கூட இந்த ராஜ்மாவை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. நம் இளமையாக இருக்கும்போது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதில் அப்படி என்னதான் பயன்கள் இருக்கின்றது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

rajma

அடங்கியுள்ள சத்துக்கள்
இந்த ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது.

உடலின் எடையை குறைக்க
ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதில் அதிகப்படியான புரதச் சத்து நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட் அளவினை அதிகமாக சேர்க்க விடாமல் தவிர்க்கின்றது. உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

Rajma

புற்றுநோய் தாக்கத்தை குறைக்க
புற்று நோய் உள்ளவர்கள் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோய் செல்கள் நம் உடம்பில் அதிகமாகாமல் தடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இந்த மக்னீசியம் சத்தானது ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு நம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் k அதிகமாக இருப்பதால் நம் உடம்பில் புதியதாக செல்கள் உருவாக்குவதில் இருக்கின்ற சிக்கல்களை தடுத்துவிடும்.

- Advertisement -

இதய ஆரோக்கியத்திற்கு
ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் நம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதில் இருக்ககும் கரையக்கூடிய நார்ச்சத்தானது பெருங்குடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து விடும். இதிலுள்ள பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.

Rajma

மூளையின் செயல்திறன் அதிகரிக்க
மூளையின் நரம்பு மண்டலங்கள் திறமையாக செயல்பட வைட்டமின் k அவசியமாக தேவைப்படுகிறது. இந்த ராஜ்மாவில் வைட்டமின் k அதிக அளவு நிறைந்துள்ளது. ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களின் நினைவாற்றலும் அதிகரிக்கக்கூடும்.

மூட்டு வலி வராமல் தடுக்க
இந்த காலகட்டத்தில் முதியவர்களுக்கு மட்டும் அல்லாமல், இளமையானவர்களுக்கும் மூட்டுவலி ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த ராஜ்மாவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கின்றது. எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

Rajma

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
ராஜ்மாவில் இருக்கும் கரையக்கூடிய ஃபைபர் சத்தானது நம் உடலின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை.

மலச்சிக்கலை நீக்க
ராஜ் மாவில் இருக்கும் நார்ச்சத்தானது மலக்குடலின் இயக்கத்தை அதிகப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்தானது குடல் பகுதிகளில் நன்றாக செயல்பட்டு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது.

Rajma

உடலின் எனர்ஜியை அதிகரிக்க
இதில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்தானது நம்மை எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக இருப்பவர்கள் கூட இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

சரும அழகிற்கு
இந்த ராஜ்மாவில் வைட்டமின் b6 அதிகமாக உள்ளது. இது நம் உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். இதனை நாம் சாப்பிட்டு வரும்போது நம் சருமம் ஆரோக்கியத்தைப் பெறும். நம் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும். வயது முதிர்ந்த தோற்றம் வராமல், நீண்ட நாட்களுக்கு இளமையாக வாழலாம்.

Rajma

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் c இந்த சத்துக்கள் ராஜ்மாவில் ஏராளமாக அடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய்கள் நம்மைத் தாக்காமல் தப்பித்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு
இந்தக் ராஜ்மாவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் புரதம், இரும்பு, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் எல்லாம் கிடைக்கும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஃபோலிக் அமிலம் எனப்படும் சத்தும் இந்த ராஜ்மாவின் மூலம் கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rajma benefits in Tamil. Rajma uses in Tamil. Rajma payangal in Tamil. Rajma nanmaigal in Tamil. Rajma health benefits in Tamil.