நோய் நொடி தீர்க்கும் மந்திரம்

ramar
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில், வரக்கூடிய வருமானத்தில் பாதி மருத்துவ செலவுக்கே சரியாகப் போகிறது. வீட்டில் இருப்பவர்கள் ஒருவரை மாற்றி ஒருவருக்கு உடல் உபாதைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க ஆன்மீக ரீதியான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில் மருத்துவ செலவு படிப்படியாக குறையும். ஆரோக்கியம் படிப்படியாக உயர்வதை கண்கூடாக காணலாம்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய இந்த மந்திரம், உடல் உபாதைகளுக்கும், தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் தீர்வு தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. காஞ்சி மகா பெரியவா அவர்கள் தங்களுடைய பக்தர்களுக்கு இந்த பரிகாரத்தை சொல்லி உள்ளார்கள்.

- Advertisement -

தினமும் வீட்டில் ராம நாமத்தை உச்சரிக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, துளசி இலைகளால் ராமர் படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும் ‘ராம ராம ராம ராம ராம’ என்ற மந்திரத்தை உச்சரியங்கள். குடும்பத்தோடு சேர்ந்து இந்த பூஜையை செய்தாலும் சரி அல்லது குடும்பத் தலைவன் மட்டும் இந்த பூஜையை செய்தாலும் சரி, அல்லது குடும்பத் தலைவி இந்த பூஜையை செய்தாலும் சரி, இந்த ராம நாமம் உங்கள் வீட்டில் தினமும் உச்சரிக்கப்பட வேண்டும்.

ராமருக்கு 1 டம்ளர் தண்ணீரில், 2 துளசி இலைகளை போட்டு தீர்த்தத்தை வைத்து விடுங்கள். பூஜையை முடித்துவிட்டு இந்த தீர்த்தத்தை பிரசாதமாக கொடுத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். தொடர்ந்து இந்த வழிபாட்டை எந்த வீட்டில் செய்து வருகிறீர்களோ அந்த வீட்டில் மருத்துவ செலவு குறையும்.

- Advertisement -

சொல்லப்போனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு ரூபாயை கூட மருத்துவத்திற்க்கு செலவு செய்ய மாட்டீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த பரிகாரம். இதை கேட்பதற்கு எலிமையாக இருக்கலாம். ராம மந்திரத்தை உச்சரிக்க கூடிய இடத்தில் அதைக் கேட்பதற்கு அனுமன் வேற வந்து அமர்ந்து கொள்வாராம். பிறகு கேட்கவா வேண்டும்.

உங்களுடைய வீடு சுபிட்சம் அடையும். நோய் நொடி பிரச்சனை மட்டும் அல்ல வீட்டில் இன்னும் தீராமல் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அதை எல்லாம் தீர்க்கக் கூடிய வேலையை ராமர் பார்த்துக் கொள்வார். அதற்கு உதவியாக ஹனுமன் இருப்பார். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மன தைரியத்தை கொடுப்பார்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி வசிய பரிகாரம்

நம்பிக்கை உள்ளவர்கள் 48 நாள் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள் உங்களுக்குள்ளேயே நல்ல மாற்றம் தெரியும் நல்லது நினைப்பவர்களுக்கு கடவுள் நல்ல விஷயங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -