நம் உடலை நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ராமர் ஸ்தோத்திரம்

ramar

மற்றவர்களை கவரும் வசீகரத்தையும், ஆஜானுபாகுவான உடல் வலிமையையும் பெற்ற ராமனின் அருளை நாம் முழுமையாக பெற்றால், நம் உடலிலும், மனதிலும் உள்ள பிணிகள் நீங்கி ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்க்கையை பயனுள்ளதாக வாழலாம். இதோ உங்களுக்கான ராம ஸ்தோத்திரம்.

ramar

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்த பாப நாசகம்
ஸ்வபக்தபீதி பஞ்ஜனம் பஜேஹம் ராமமத்வயம்
நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பயாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராமமத்வயம்

– ஸ்ரீராம புஜங்காஷ்டகம்

ramar

இதன் பொருள்
அழகான சுருண்ட ஜடை முடியையும், பக்தர்களின் எல்லா பாவங்களையும் போக்கி, சந்தோஷமான வாழ்வினை அளிப்பவரும், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நிம்மதியாக வாழ்வதற்கு காரணமாக இருக்கும் எம்பெருமானே, ஸ்ரீராமபிரான் உன்னை மனதார வணங்குகின்றோம். ஆத்மாவின் உருவத்தினை உணரச் செய்த நாயகனும் நீயே, கருணை கடலும் நீயே, மனிதனுக்கு பிறப்பு இறப்பு பயத்தை நீக்கு, உடலில் ஏற்படும் பிணியையும் நீக்கி, குறைவற்ற செல்வத்தை தந்து, நோயற்ற வாழ்வையும் தந்து எங்களைக் காத்தருள்வாயாக. எந்த வித தோஷமும் அண்ட முடியாத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியான உங்களை வணங்குகின்றோம்.

இதையும் படிக்கலாமே
கர்ப்பிணி பெண்களுக்கான கர்பரக்ஷாம்பிகை மந்திரம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rama stotram in Tamil. Rama slogam in Tamil. Ramar manthiram in Tamil. Rama mantra in Tamil. Ramar slokas.