யுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்

Perumal-and-Raman
- Advertisement -

ஶ்ரீமன் நாராயணனை வணங்காத கைகளும் நேசிக்காத உள்ளமும் உண்டோ? அப்படித்தான் புராணகாலத்தில் வேதவதி என்னும் பெண்ணும் நாராயணனை நேசித்ததுடன், நாராயணனே தனக்கு மணாளனாக வரவேண்டும் என்றும் விரும்பினாள்.

perumal

இத்தனைக்கும், அவளுடைய அழகில் மயங்கி பல ராஜகுமாரர்கள் அவளை மணந்துகொள்ள முன்வந்தபோதும், அவர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நாராயணனையே மணந்துகொள்வது என்பதில் உறுதியாக இருந்த வேதவதி, நாராயணனே தனக்குக் கணவராக வாய்க்க வேண்டும் என்பதற்காக, தவம் மேற்கொண்டாள்.

- Advertisement -

ஒரு முறை, அந்தவழியாக வந்த ராவணன் வேதவதியைக் கண்டான். கண்டவுடனே காதல் கொண்டான். அவளுடைய அழகில் மயங்கி, அவளது அருகில் சென்று, அவளைப் பலவாறாக வர்ணிக்கத் தொடங்கினான். ராவணனின் வார்த்தைகள் வேதவதியின் தவத்தைக் கலைக்கவே, கண் திறந்துப் பார்த்தாள்.

Ravanan

ஆஜானுபாகுவாக அசுரன் ஒருவன் வேட்கையுடன் தன் அருகில் நிற்பதைப் பார்த்து மிகவும் பயந்து போய் விட்டாள்.
சிம்ம நிகர் குரலோடு ராவணன், ”அழகுமிகு நங்கையே! இலங்காபுரியை ஆளும் ராவணன் நான். ஈரேழு பதினான்கு உலகங்களையும் வென்றவன். தேவாதி தேவர்களின் அரசனான இந்திரன்கூட என் அடிமை. மும்மூர்த்திகளும் என்னைக் கண்டால், பயப்படுவார்கள். ஆகவே மூன்று உலகங்களும் என் கையில் இருக்கின்றன.

- Advertisement -

நானும் எவ்வளவோ இடங்களைச் சுற்றி வந்துவிட்டேன். உன்னைப் போன்ற ஒரு பேரழகியை நான் கண்டதில்லை. உன்னைப் பார்த்த பிறகு என் மனம் என் வசம் இல்லை. என்னைத் திருமணம் செய்துகொள்! தவத்தை விட்டு எழுந்திரு! இலங்கையின் பட்டத்துராணியாக உன்னை ஆக்குகிறேன்’ என அழைத்தான்.

Ravanan

ராவணனின் சொற்களைக் கேட்ட வேதவதிக்கு, கடுங்கோபமும், பயமும் ஏற்பட்டன. ஆயினும், எப்படியோ மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, ”அரக்கர் தலைவா! நாராயணனைத் தவிர, நான் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். இப்போதும் நான் அவரை நினைத்துத்தான் தவமிருக்கிறேன். ஒருவேளை அவர் என்னைப் புறக்கணித்தால், உயிரைவிடுவேனேயொழிய, மற்றொருவரைக் கனவிலும் நினைக்க என் மனம் இடம் தராது. ஆகவே, நீவிர் வந்தவழியே செல்லுங்கள்” எனக் கூறி மறுப்புரைத்தாள்.

- Advertisement -

கோடை இடியென வெடிச்சிரிப்பாக சிரித்த ராவணன்,
”பெண்ணே! யார் அந்த நாராயணன்! என் பெயரைக் கேட்டாலே அவன் நடுங்கிவிடுவான். நான் நேரில் வந்து கேட்டபோதும்கூட மறுக்கிறாயே! உன்னைப் பலாத்காரமாக என் வசமாக்கிக் கொள்வேன். அப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார் என்று பார்ப்போம்” எனக் கூறிக்கொண்டே, ராவணன் வேதவதியை நெருங்கினான்.

Ravanan

அவளோ பயந்துவிட்டாள். அவனால் தனக்குக் கேடு விளையும் என்று எண்ணி மிகவும் கோபமாக, ”கேடுகெட்டவனே. என் தவத்தைக் கலைத்து, என் விருப்பமில்லாமல், என்னை பலாத்காரம் செய்ய முன்வந்துவிட்டாயே! நான் வளர்த்திருக்கும் இந்த யாகத்தீயில் நானே விழுந்து சாம்பலாகிறேன். என்னைப் போன்ற ஒரு மங்கையால் நீயும், உன் குலமும் அழியும்” என்று சபித்து, நெருப்பில் விழுந்து சாம்பலாகிப் போனாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ராவணன் அங்கிருந்து விலகிப்போனான். காலம் உருண்டோடியது.

சில ஆண்டுகளுக்குப் பின், ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான். அச்சமயத்தில் ராவணன் முன்பாக அக்கினி பகவான் தோன்றினார். சீதையைக் காப்பாற்ற முடிவுசெய்து, ”ராவணா, நீ கடத்திக் கொண்டுபோகும் சீதை, மாய சீதை. உண்மையான சீதையை ராமன் என்னிடம் ஒப்படைத்துள்ளான். இந்த மாய சீதையை என்னிடம் விட்டுவிடு. உனக்கு உண்மையான சீதையை நான் தருகிறேன்” என்று கூறினான்.

sita

உண்மை என்று நம்பிய ராவணன், தன்னிடம் இருந்த சீதையை விட்டு விட்டான். அக்கினி பகவான் தன்னிடம் சாம்பலாகியிருந்த வேதவதியை பெண்ணுருவாக்கி ராவணனுக்குக் கொடுத்து, உண்மை சீதையை தனக்குள் மறைத்துக் கொண்டார்.
ராவணவதம் நடந்து முடிந்தபிறகு, சீதை அக்னிபிரவேசம் செய்து, தன் கற்பின் மகிமையை உணர்த்தினாள். அப்போது நெருப்பில் விழுந்தவள் உண்மையில் மாய சீதையான வேதவதிதான்.

ஆகையால், உண்மையான சீதையையும், வேதவதியையும் அக்கினி பகவான் ராமனிடம் ஒப்படைத்து, வேதவதியையும் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

Raman

அதற்கு, ராமபிரான் அக்கினி பகவானிடம், ”நான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதன். ஒரு மங்கையைத்தான் மணந்துகொள்வேன். கலியுகத்தில், இந்த வேதவதியை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” எனக் கூறி வாக்களித்தார்.

இதையும் படிக்கலாமே:
காசியில் பிச்சை எடுத்த இறைவன் ! பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன நடந்தது ?

இந்தக் காரணத்தினால்தான் வேதவதி பத்மாவதி என்ற பெயரில் ஆகாச ராஜனுக்கு மகளாகக் கிடைத்தாள். அதன் பிறகுதான் திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக பத்மாவதி தாயாரை மணம் புரிந்து ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக கதைகள் மற்றும் ஜோதிடம் சம்மந்தமான பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -