மக்கள் முன் ரமண மகரிஷி நிகழ்த்தி காட்டிய அதிசயம்

Natarajar-and-Einsten-1
- Advertisement -

நம் இந்திய நாடே ஒரு ஆச்சர்யமான ஒரு நாடாகும். இந்த இந்திய நாட்டில் மட்டுமே தினந்தோறும் இறைவன் புரியும் அதிசயத்தை ஒருவர் காண முடியும் என இந்த நாட்டில் ஆன்மீக தேடலில் ஈடுபட்டு, இறைஅனுபவத்தை பெற்ற பல மேலைநாட்டு அனுபவசாலிகள் புகழ்ந்து கூறியுள்ளனர். நமது நாட்டு மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக நம் நாட்டில் பல ஞானிகள் தோன்றியுள்ளனர். அப்படி நாடு முழுவதுமுள்ள பக்தர்களால் போற்றப்படும் “திருவண்ணாமலையில்” வாழ்ந்த மிகச் சிறந்த ஒரு ஞானிதான் “ரமண மகரிஷி” அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு அதிசய சம்பவத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Ramana Maharshi

“திருவண்ணாமலை” “அருணாச்சல மலை” அடிவாரத்தில் தனக்குரிய ஆசிரமத்தில் தங்கியிருந்து “ரமண மகரிஷி” தன்னை தேடி வந்தோரிடம் வேறுபாடுகளைக் காணாமல் அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். அவரின் அந்த ஆசிரமத்தில் வாழும் மக்கள் தங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் வாழும் கருத்துக்களைக் கொண்ட புராண மற்றும் இதிகாச காலட்சேபங்களை சில ஆன்மிகப் பேச்சாளர்கள் தினந்தோறும் நிகழ்த்தி வந்தனர். அதை கேட்பதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரும்.

- Advertisement -

அப்படி ஒரு முறை ஒரு பசு மாடு அந்த கதை காலட்சேபம் நடக்கும் இடத்திற்கு வந்து, அந்த மைதானத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த காலட்சேபத்தை கேட்க ஆரம்பித்தது. இதை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டனர். ரமண மகரிஷியும் இதைக் கண்டார். பின்பு ஒவ்வொரு நாளும் ரமணரின் ஆசிரமத்தில் நடக்கும் காலட்சேபத்திற்கு அந்த பசுமாடு தவறாமல் வருகை புரிந்தது. இந்த நிகழ்வு சில ஆண்டுகள் தொடர்ந்தது.

திடீரென்று ஒரு நாள் அந்த காலட்சேபம் நடக்கும் இடத்திற்கு அந்த பசுமாடு வரவில்லை. இதனால் அங்கிருந்த அனைவரும் அந்த பசுமாட்டிற்கு என்ன நடந்ததோ என்று எண்ணி கவலையுற்றனர். ரமண மகரிஷியும் சற்று கவலை அடைந்தார். எனவே இத்தனை ஆண்டு காலம் எதற்காகவும் தனது ஆசிரமத்தை விட்டு வெளியே வராத ரமணர், முதல் முறையாக அந்த பசுமாட்டை தேடிக்கண்டுபிடிக்க வெளியே வந்தார். பல இடங்களில் தேடிய பின் ஓரிடத்தில் அந்த பசுமாடு உடல் நலம் குன்றி படுத்திருப்பதைக் கண்டார் ரமணர். உடனே அந்த பசுமாட்டின் அருகில் சென்று அதன் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தார் ரமணர். சிறிது நேரத்தில் அந்த பசு மாடு தன் உயிரை விட்டது. அப்போது ரமணர் இந்த பசுமாட்டின் ஆன்மா முக்தி அடைந்து விட்டதாகவும் அதற்கு மறுபிறவி இல்லை என தன் பக்தர்களிடம் கூறினார். அங்கிருந்த எல்லோரும் அந்த பசுமாடு பெற்ற பாக்கியத்தை எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

- Advertisement -