நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு சமயத்தில் நன்றாக வாழ்ந்திருப்போம். அதற்குப் பிறகு ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த வாழ்க்கை என்பது படிப்படியாக குறைந்தோ அல்லது திடீரென்று மாறி ஒன்றும் இல்லாமல் போயிருப்போம். இது எப்படி வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், இருந்தாலும் நாம் இழந்தது இழந்ததாகவே தான் இருக்கும். பட்ட அவமானங்களும், கஷ்டங்களும் விலகி இழந்த செல்வம் திரும்பப் பெறுவதற்கும், மதிப்பும் மரியாதையுடன் வாழ்வதற்கும் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ரம்பா திருதியை வழிபாடு
ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவிட்டார் என்றால் மறுபடியும் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் இழந்த மரியாதையும் கிடைத்த அவமானங்களையும் மாற்றுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. எவ்வளவு பெரிய செல்வங்களை இழந்து இருந்தாலும், மதிப்பை இழந்து இருந்தாலும், அவமானங்களை சந்தித்திருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி மீண்டும் மதிப்புடனும் மரியாதையுடனும் செல்வ செழிப்புடனும் வாழ்வதற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டு முறை தான் ரம்பை திருதியை வழிபாடு.
தேவலோகத்தில் இருக்க கூடியவர் தான் ரம்பை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஒரு சமயத்தில் அவமானங்கள் நேர்ந்த போது பூலோகத்தில் தவம் இருக்கும் பார்வதி தேவியை வழிபாடு செய்து இழந்த மதிப்பையும் மரியாதையும் திரும்ப பெற்றுக் கொள் என்று தேவேந்திரன் கூறினாராம். அதை கேட்டு பூலோகம் வந்த ரம்பை தவம் செய்து கொண்டிருந்த அம்பாளை சுற்றி வாழை மரமாக இருந்து அம்பாளுக்கு பாதுகாப்பாக இருந்தாராம். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதி அன்று மஞ்சளில் அம்பாளை செய்து வைத்து வழிபாடும் செய்தாராம். அப்படி செய்ததன் விளைவாக அம்பாள் ரம்பைக்கு காட்சியளித்து அவர் இழந்த அனைத்தையும் திரும்ப பல மடங்கு அதிகமாக பெறச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
அப்படிப்பட்ட ரம்பை திருதியை தான் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வருகிறது. இந்த நாளில் நாம் வரலட்சுமி விரதத்தின் சமயம் எப்படி அம்பாளை அலங்காரம் செய்வோமோ அதேபோல் கலசம் வைத்து அம்பாளின் முகத்தை வைத்து அந்த முகத்திற்கு மேல் மஞ்சள் முழுவதுமாக தடவி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலசத்திற்கு இரண்டு புறங்களிலும் வாழை கன்றுகளை வைக்க வேண்டும். அன்றைய தினம் கண்டிப்பாக முறையில் அதிக அளவில் வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக வைத்து தீபம் ஏற்றி அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்யும்பொழுது பின்வரும் இந்த இரண்டு பாடல்களையும் உங்களால் எத்தனை முறை பாராயணம் செய்ய முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பாடல்
ஹே கௌரீ ஸங்கரர்தாங்கீ யதா த்வம் ஸங்கரப்ரியா
ததா மாம் குரு கல்யாணி காந்த்கதம் ஸுதுர்லபாம்.
வையகம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,–பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே .
இதையும் படிக்கலாமே:வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பலன்
இந்த முறையில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி திருதியை திதி அன்று நாம் அம்பாளை மஞ்சளால் அலங்கரித்து வாழை மரக்கன்றை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் நாம் இழந்தது எதுவாக இருந்தாலும் அது பல மடங்கு அதிகமாக நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.