வெறும் 5 நிமிடத்தில் கோதுமை மாவில் ஸ்வீட் போண்டா பஞ்சு போல ரெடி! இதை வாயில் வைத்தால் கரைந்து போவதே தெரியாது. கேக்கு போல சூப்பரா இருக்கும்.

bonda
- Advertisement -

மிக மிக எளிமையான முறையில் சாயங்காலம் டீ போடும் நேரத்தில் இந்த கோதுமை மாவு ஸ்வீட் போண்டாவை செய்து விடலாம். இது சாப்பிட பஞ்சு போல, அப்படியே கேக்கு போல, நமக்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி சுலபமாக தயாராகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விரும்பி சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான ரெசிபியும் கூட. மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. இப்படி ஒரு போண்டா ரெசிபியை இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கக்கூட வாய்ப்பு இல்லை. முற்றிலும் புதுமையான ரெசிபி இது. ரெசிபி தெரிந்திருந்தால் ரொம்ப நல்லது. தெரியாதவர்கள் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் காய்ச்சிய பால் – 1/2 கப், சர்க்கரை – 1/4 கப், முட்டை – 1, ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன், கோதுமை மாவு – 1 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு அடித்து கலந்து, வெறும் ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். சில பேருக்கு முட்டை பிடிக்காது அல்லவா. சைவமாக இருந்தால் முட்டைக்கு பதிலாக, லேசாக புளித்த தயிர் 1/4 கப் இதோடு சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் ஊறிய பின்பு இந்த மாவில் ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன், எலுமிச்ச பழச்சாறு – 1 ஸ்பூன், ஊற்றி மீண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு இந்த மாவை சூடான எண்ணெயில் ஊற்றி பொறித்து எடுக்க வேண்டியதுதான். இதில் சேர்த்திருக்கும் பால் சர்க்கரை இதிலிருந்தே தண்ணீர் விடும். கூடுதலாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்கு தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயில் எண்ணெயை வைத்து, எண்ணெய் சூடானதும் அடுப்பை முழுமையாக சிம்மில் வைத்து விடுங்கள். இந்த மாவை ஊற்றிய உடனேயே கருகிப் போய்விடும். உள்ளே சிவக்காது. ஆகவே அடுப்பை கட்டாயமாக சிம்மில் வைத்துவிட்டு, சூடான எண்ணெயை குழி கரண்டியில் மோந்து வைத்து, அதன் உள்ளே மாவை ஊற்றுங்கள்.

- Advertisement -

ஓரிரு வினாடிகள் கழித்து குழி கரண்டியில் இருக்கும் போண்டாவை அப்படியே மெதுவாக கடாயில் இருக்கும் சூடு எண்ணெயில் விட்டு விடுங்கள். அப்போது உங்களுக்கு உருண்டையாக அழகான ஷேப் கிடைக்கும். அப்படியே இந்த மாவை அப்பம் போல, சூடான எண்ணெயில் ஊற்றினாலும் தவறு கிடையாது. சரியான உருண்டை வடிவம் கிடைக்காது அதற்காகத்தான்.

ஒரு சில நிமிடங்களில் மேலே சிவந்து, உள்ளே வெந்து குண்டு குண்டாக போண்டா தயாராகிவிடும். எண்ணெயிலிருந்து வடிகட்டி வெளியே எடுத்து விட்டு, கொஞ்ச நேரம் ஆறவிட்டு, பிறகு சுவைத்து பாருங்கள். கேக்கு போலவே அத்தனை ருசி இருக்கும். முட்டை சேர்க்கும் போது ஒரு ருசி நமக்கு கிடைக்கும். தயிர் சேர்க்கும்போது ஒரு ருசி நமக்கு கிடைக்கும். முட்டை சேர்த்தால் தான் இந்த போண்டா பஞ்சு போல, கேக்கு போல கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சூடான சுவை மிகுந்த கும்பகோணம் கடப்பா செய்வது இவ்வளவு ஈஸியா? பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு இனி தொட்டுக்க இதை செஞ்சு பார்ப்போமே!

கோதுமை மாவை அளந்த அதே டம்ளரில், மத்த பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள். சர்க்கரை 1/4 கப், சரியான அளவாக இருக்கும். உங்களுக்கு இனிப்பின் சுவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேவைப்படும் என்றால், கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. இந்த போண்டாவை பார்க்கும் போதே சில பேருக்கு சாப்பிட தோன்றும். ஒரு முறை மிஸ் பண்ணாம முயற்சி செய்து தான் பாருங்களேன். குழந்தைகளுக்கு விருப்பமான சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி இது.

- Advertisement -