சூப்பரான ரசப் பொடியையும், எல்லா வகையான வறுவலுக்கு சுவை சேர்க்க, ஒரு வித்தியாசமான பொடியையும் வீட்டிலேயே வறுத்து அரைப்பது எப்படி?

resa-podi

ரசம் வைப்பதற்கு நம்முடைய வீட்டிலேயே ரசப்பொடி சுலபமாக, சூப்பராக எப்படி அரைப்பது என்பதைப் பற்றியும், உருளைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல், கத்தரிக்காய் வதக்கல், கருணைக்கிழங்கு வறுவல், சேனைக்கிழங்கு வறுவல், இப்படிப்பட்ட பலவகைப்பட்ட வறுவலுக்கு, சுவையை மேலும் அதிகரிக்க ஒரு பொடியையை நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?  என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rasa-podi

இந்தப் பொடியை அரைத்து வைத்து விட்டால், ஐந்து நிமிடத்தில் ரசம் வைத்து விடலாம். ஏதாவது ஒரு காய் இருந்தால் அதை எண்ணெயில் வெட்டிப்போட்டு, வதக்கி, இந்தப் பொடியை சேர்த்து, வறுத்தால் சுவையாக உடனடியாக சாப்பாடு தயாராகிவிடும். இன்ஸ்டன்ட்டா, சீக்கிரமா சமைக்க இரண்டு போடி.

ரசப் பொடி அரைப்பது எப்படி?
கடலைப்பருப்பு – 1/4 கப், துவரம்பருப்பு – 1/4 கப், சீரகம் – 1/4 கப், மிளகு – 1/4 கப், கறிவேப்பிலை –  2 கொத்து, வரமிளகாய் – 10, பெருங்காயம் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்.

rasa-podi1

இந்தப் பொருட்களையெல்லாம் கடாயில் போட்டு, எண்ணெய் ஊற்றாமல் சிவக்கும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா பொருட்களையும் தனித்தனியாக தான் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். மஞ்சள்தூள், பெருங்காயத்தை மட்டும் வறுக்க வேண்டாம்.

- Advertisement -

வறுத்தெடுத்த பொருட்களை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒரு ஸ்பூன் பெருங்காயமும், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் ஒரு ஓட்டு ஓட்டி கொள்ளுங்கள். இந்தப் பொடியை நன்றாக ஆறவைத்து, அதன் பின்பு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட்டால், நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வாசனையோடு இருக்கும். ரசம் வைக்க தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

mysore-rasam

வறுவலுகான பொடியை அரைப்பது எப்படி?
காய்ந்த மிளகாய் – 15, தனியா – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், மிளகு – 1/4 கப், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – 1 டேபிள் ஸ்பூன். இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டாம். இது நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

potato-round-fry1

இந்தப் பொடியையும் நன்றாக ஆற வைத்த பின்பு, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், எல்லா வகையான வறுவல்களுக்கும், இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து சமைத்தால் வாசமாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். சிலபேர் தேங்காய் போட்டு பொரியல் செய்வார்கள். அப்படிப்பட்ட பொரியல்களுக்குக் கூட, இறக்குவதற்கு 2 நிமிடம் முன்பு, அரை ஸ்பூன் இந்தப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் சுவை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
இப்பதான் உங்க வீட்ல இட்லி மாவு அரைச்சு வச்சிருக்கீங்களா? உடனே அந்த மாவை எடுத்து இத செஞ்சு பாருங்க! வெறும் 10 நிமிடமும், 2 பொருள் மட்டுமே போதும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.