நான் கனவிலும் நினைக்காதது அடுத்த வருடம் நடக்க உள்ளது. ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரஷீத் கான்

rashid-khan

ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி அங்கீகரித்த அணியாக கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக முதல் முதலாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. அந்த ஒரு போட்டி மட்டுமே ஆப்கானிஸ்தான் டெஸ்ட் வடிவில் விளையாடி உள்ளது.

rashid

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து அங்கு டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது அந்த அணியின் வீரர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் ரஷீத் கான் கூறியதாவது : நாங்கள் ஆஸ்திரேலியா போன்ற வேகம் மற்றும் பவுன்ஸ் கலந்த ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகள் ஆடுவோம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்நிகழ்வு என் கனவில் கூட எட்டாத ஒன்றாக உள்ளது. நாங்கள் ஆஸ்திரேலிய மைதானங்களில் டி20 போட்டிகள் நிறைய ஆடியுள்ளோம்.

rasid khan

ஆனால், உண்மையான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் போட்டிகள் என்பது எங்களுக்கு நிச்சயம் ஒரு கனவு விடயம் தான். அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்த தொடர் என்வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அந்த தொடருக்காக நான் காத்திருக்கிறேன் என்று ரஷீத் கான் தெரிவித்தார். இதுவரை ஆப்கானிஸ்தான் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளது.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணிக்கு எதிராக அடுத்த திட்டத்தை வகுத்து விட்டோம் – சான்ட்னர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்