இந்திய அணிக்கு எதிராக அடுத்த திட்டத்தை வகுத்து விட்டோம் – சான்ட்னர்

santner

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியுடனான முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி நாளை (30-01-2019) நடைபெற உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்சல் சான்ட்னர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி வீரர்கள் எங்களிடம் இருந்து எளிதாக ஆட்டத்தினை பறித்து எண்களின் வெற்றியை தவிடு பொடியாக்கினர். ஆனால், இந்த முறை இந்திய அணியின் வெற்றியை நாங்கள் தடுக்க வழி வகுத்துள்ளோம்.

அதன்படி இந்திய அணி பவுலிங் செய்யும்போது முதல் பத்து ஓவர்களுக்கு நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் எங்களால் நிறைய ரன்கள் அடிக்க முடியும். எனவே, முதல் பாத்து ஓவர்களை வீசும் ஷமி மற்றும் குமார் ஆகியோரது பந்துவீச்சை கணித்து பிறகு ரன்கள் அடிக்க முடிவெடுத்துள்ளோம். கடந்த போட்டியில் டெய்லர் மற்றும் லேதம் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

boult

அதைப்போன்ற ஆட்டம் இந்த போட்டியில் ஆடவேண்டும். மேலும், இந்திய அணியின் துவக்க வீரர்களை முதலில் பிரித்து அணிக்கு நெருக்கடியை கொடுத்து இந்திய அணியை வீழ்த்த பவுலிங் பிளான் ஒன்றினையும் வைத்துள்ளோம். எனவே, நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற முழுமையாக பாடுபடும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிக்கலாமே :

நியூஸி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இரட்டைசதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் – சாதனை உறுதி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்