மிரட்டல் சாதனை : டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் – வைரல் வீடியோ

Rashid

ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஐயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் ஜெயித்த ஆப்கனிஸ்தான் அணி நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடியது.

Nabi

இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நபி அவரின் அதிரடி மூலம் 36 பந்துகளில் 81 ரன்களை குவித்து அணியை பெரிய ரன்களை குவிக்க உதவினார். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 210 ரன்களை குவித்தது. பிறகு ஆடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 178 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் ஆப்கான் அணி தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் ஒரே ஓவரில் அவரில் தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இதன்மூலம் இலங்கை அணியின் மலிங்காவிற்கு அடுத்து 4 பந்தில் 4 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், டி20 போட்டி ஒன்றில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதையும் படிக்கலாமே :

19ஆவது ஓவர் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் குடுத்துடீங்களே. அதுவும் அடிச்சது பவுலர் உமேஷை வறுத்து எடுத்த நெட்டிசன்கள் – புலம்பும் ரசிகர்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்