19ஆவது ஓவர் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் குடுத்துடீங்களே. அதுவும் அடிச்சது பவுலர் உமேஷை வறுத்து எடுத்த நெட்டிசன்கள் – புலம்பும் ரசிகர்கள்

Bumrah

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் சரிவை சந்தித்தது. அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வந்தனர். போட்டி பரபரப்பான கட்டத்திற்கு சென்றது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார்.

Maxwell

அதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். புது பேட்ஸ்மேன்கள் இரண்டு பேர் அந்த இலக்கை சிரமமின்றி அடித்தனர். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் இணையத்தில் உமேஷ் யாதவ்வை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், அவரின் அந்த ஓவர் குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

சும்மா பேட் சுத்துனா சிக்ஸ் போச்சு. அதனால நான் அவரையே டார்கெட் பண்ணி அடிச்சேன் அணிக்கு வெற்றியும் கிடைச்சாச்சு – மேக்ஸ்வெல் ஹேப்பி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்