உங்கள் ராசிப்படி எதை செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?

Astrology

அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்கள் எவருமில்லை. அந்த அதிர்ஷ்டம் நம் வாழ்வில் எப்போது ஏற்படும் என்று நம்மால் உறுதியாக கூறமுடியாது. ஆனால் அதிர்ஷ்டம் நம் வாழ்க்கையில் ஏற்படுவதற்கான சூழலை சில பரிகாரங்களை செய்வதன் மூலம் ஏற்படுத்த முடியும். அப்படி 12 ராசியினருக்கான பரிகார முறைகள் இங்கு கூறப்பட்டுள்ளன. அவற்றை விரிவாக இங்கு காண்போம்.

மேஷம்:

Mesham Rasi

மேஷ ராசி செவ்வாய் பகவானின் ஆதிக்கம் அதிகமுள்ள ராசியாகும். இந்த ராசியினர் தாங்கள் ஈடுபடும் முக்கியமான காரியங்களில் வெற்றியடைய சிகப்பு நிற ஆடைகளை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இது முடியாதவர்கள் சிகப்பு நிற கைகுட்டையாவது தங்களுடன் வைத்திருப்பது நல்லது.

ரிஷபம்:

Rishabam Rasi

இன்பங்கள் அனைத்தையும் அள்ளித்தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் கொண்டது ரிஷப ராசி. இந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு, தினந்தோறும் காலையில் வீட்டின் பூஜையறையில் ஸ்ரீ தத்தாத்ரேயர் படத்தை பார்த்து வணங்க வேண்டும்.

மிதுனம்:

midhunam

- Advertisement -

அறிவுக்கூர்மையை தரும் புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மிதுன ராசியினர், தங்களின் வீட்டில் படிகார கல்லை வைத்திருப்பதும், அந்த படிகார கல்லை மாவு போல் பொடித்து, காலையில் பற்பொடிக்கு பதிலாக படிகார மாவை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

தமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கடகம்:

Kadagam Rasi

மனோகாரகனான சந்திரபகவானின் ஆதிக்கம் நிறைந்த கடக ராசியினர், தங்களின் வாழ்வில் பல அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு வீட்டில் செம்பு திருகாணிகள் பொருத்தப்பட்ட கட்டில்களில் உறங்கவேண்டும். செம்பு பாத்திரங்களில் வைக்கப்பட்ட நீரை அருந்த வேண்டும்.

சிம்மம்:

simmam

சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த சிம்ம ராசியினர், விஷேஷங்களின் போது இவர்களின் தாய்மாமன் மற்றும் இவர்களின் வாழ்க்கை துணையின் சகோரத வழி உறவுகளுக்கு விருந்து அல்லது ஏதேனும் பரிசு பொருளை அளிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கன்னி:

Kanni Rasi

பெண்களால் நன்மை அடையும் யோகம் கொண்ட கன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் தொடர்ந்து ஏற்பட, தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது பூஜையறையில் இறைவனை வழிபட்டு செல்ல வேண்டும்.

துலாம்:

Thulam Rasi

பொருள்செல்வத்தை அதிகம் ஈட்டும் அமைப்பு கொண்ட துலாம் ராசியினர், வாரம் இருமுறை அல்லது ஒருமுறையேனும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வது அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும். அனைத்திலும் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்:

virichigam

போர்கிரகமான செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட இந்த ராசியினர், செவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற மலர்களை கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு வருவது இவர்கள் செய்கின்ற காரியங்களில் வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.

தனுசு:

Dhanusu Rasi

நற்குணங்களை ஒருவருக்கு அளிக்கும் குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட தனுசு ராசியினர், யாசகம் கேட்டு வரும் யாசகர்களுக்கு உணவையோ அல்லது சிறிது பண தொகையாகவோ கொடுத்து வருவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் ஏற்படுத்தும்.

மகரம்:

Magaram rasi

செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகர ராசியினர், தங்களின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட சிநேகிதங்கள், நட்பு போன்றவற்றை தவிர்த்தாலே அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செயலாக இருக்கும். எதிர்பாலினரிடம் இடைவெளி விட்டு பழகுவது நன்மையை அளிக்கும்.

கும்பம்:

Kumbam Rasi

சனிபகவானின் சொந்த ராசி மற்றும் அவரின் ஆதிக்கம் கொண்ட கும்ப ராசியினர், குங்கும பூக்களை அரைத்து மைபோல் ஆக்கி, அதில் மிக சிறு அளவை தினமும் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ள மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மீனம்:

meenam

குரு பகவான் உச்சமடையும் வீடான மீன ராசியில் பிறந்தவர்கள், தங்களின் சட்டைப்பையில் எப்போதும் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படத்தை வைத்திருப்பது உங்களுக்கு ஏற்படவிருக்கும் தீமைகள் விலகி, உங்களுக்கு பல வெற்றிகளையும் மேன்மேலும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
செல்வத்தை அள்ளித்தரும் தரும் துவஜ யோகம் பலன்கள்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have rasi athistam in Tamil. Mesha rasi athistam, Rihaba rasi athistam, Mithuna rasi athistam, Kadaga rasi athistam, Simma rasi athistam, Kanni rasi athistam, Thulam rasi athistam, Virichiga rasi athistam, Dhanusu rasi athistam, Magara rasi athistam, Kumba rasi athistam, Meena rasi athistam are given above in Tamil language.