செல்வத்தை அள்ளித்தரும் தரும் துவஜ யோகம் பலன்கள்

Astrology

வாழ்க்கையை அனைத்து வகைகளிலும் அனுபவித்து வாழ அனைவராலும் முடியாது. ஒரு அரசனை போன்ற பல சுகங்களை அனுபவிக்கவும், செல்வச்செழிப்பில் வாழவும் ஒருவர் பிறக்கும் போதே நல்ல யோகத்தில் பிறந்திருந்தால் மட்டுமே முடியும். அப்படி மிகச்சிறந்த வாழ்க்கையை அளிப்பது தான் “துவஜ யோகம்”. இந்த யோகத்தை பற்றி இங்கு சிறிது அறிந்து கொள்ளலாம்.

astrology

ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீட்டில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் அனைத்தும் இருந்து, அந்த லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் அனைத்தும் இருப்பின் அந்த ஜாதகருக்கு “துவஜ யோகம்” ஏற்படுகிறது.

உதாரணம்:

Thuvaja yogam
துவஜ யோகம் ஜாதகம்

மேலே உள்ள ஜாதக கட்டத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ஜாதகக்கட்டத்தில் உள்ள லக்கினத்தில் சுபகிரங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியவை உள்ளன. அதே போல லகத்திற்கு எட்டாவது கட்டத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. இப்படி இருந்தால் “துவஜ யோகம்” உண்டாகும்.

“துவஜ யோகம்” உள்ளவரின் ஜாதகத்தில் மொத்தம் இரண்டு கட்டங்களிலேயே அனைத்து கிரகங்களும் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும்.

- Advertisement -

astrology

துவஜ யோகத்தில் பிறந்த நபர்கள் அதிர்ஷ்டத்தின் மொத்த உருவம் என்றே கூறலாம். இவர்கள் பிறக்கும் போது அக்குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏதும் இல்லை என்றாலும் இவர்கள் பிறந்த பின்பு நல்ல செல்வ வளமை ஏற்படும். இளம் வயதிலேயே சிறந்த ஆளுமை மற்றும் நிர்வாக திறன்களை வெளிப்படுத்துவார்கள். இவர்களுக்கு அழகான வசதியான வீடு, போக்குவரத்திற்கு ஆடம்பர வாகனங்கள், கூப்பிட்டவுடன் வந்து சேவைபுரியும் பணியாட்கள் என ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கையை வாழ்வார்கள். பெருமளவில் செல்வம் சேர்ப்பார்கள். ஏகப்பட்ட நிலங்கள், தோட்டங்கள் போற்றவற்றை வாங்கி அதில் விவசாயம் மற்றும் பண்ணைகள் அமைத்து அதன் மூலமும் நல்ல லாபத்தை அடைவார்கள்.

astrology

இவர்களில் பலர் கல்வியை ஆர்வமுடன் கற்காமல் இளம் வயதிலேயே தொழில் மற்றும் வியாபார துறைகளில் ஈடுபட்டு வெற்றி பெற விரும்புவார்கள். இத்துறைகளில் இவர்கள் சிறந்த நிர்வாகிகள் என பெயரெடுப்பார்கள்.

தாங்கள் வாழும் சமூகத்திற்கு அவசியமான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டி தந்து அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெறுவார்கள். சிலர் கோவில்களை சீரமைத்தல், குளங்களை வெட்டுதல் போன்ற ஆன்மீக திருப்பணிகளையும் செய்வார்கள். எட்டாம் இடம் என்பது ஒருவரின் ஆயுளை பற்றி கூறும் இடமாகும். இந்த துவஜ யோகத்தவர்களுக்கு எட்டாம் இடத்தில் அனைத்து பாப கிரகங்களும் இருப்பதால் அவ்வப்போது சில உயிருக்கு ஆபத்தான கண்டங்களை சந்திக்க கூடிய நிலையை ஏற்படுத்தக்கூடும். இவர்கள் தொடர்ந்து தர்ம காரியங்களும், இறைவழிபடும் செய்யும் பட்சத்தில் எப்பேர்ப்பட்ட கண்டங்களும் இவர்களுக்கு பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தாமல் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
தொழிலில் வெற்றி பெற உதவும் அமல யோகம் பற்றி தெரியுமா ?

ஜாதகம் பார்ப்பது எப்படி என்று மேலும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thuvaja Yogam palangal in Tamil. Thuvaja Yogam is a very powerful yogam and the person with this yogam will live like a leader.