Astrology : இந்தாண்டு செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?

12-rasi
- Advertisement -

மனிதன் உழைப்பதற்கென்றே பிறந்தவன். உழைப்பினால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. நியாயமான வழியில் நமக்கு வருமானத்தை தரும் எந்த ஒரு வேலையும் சிறப்பான ஒன்று தான். நாம் வேலை என்று ஒன்று செய்தால் அதில் சாதக, பாதகங்கள் இருக்கவே செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டு எந்த ராசியினர் தாங்கள் செய்கின்ற வேலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்:

- Advertisement -

simmam

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு குரு பகவான் சற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் உணவு உண்ண கூட நேரமின்றி பணி செய்யும் சூழல் சிலருக்கு ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் பணி சுமை அதிகரித்தவாறே இருக்கும். ஒரு சிலர் குடும்பத்தை சில நாட்கள் அல்லது மாதங்கள் பிரிந்து பணி செய்யும் சூழ்நிலை உருவாகலாம். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்று அவப்பெயர் ஈட்டும் நிலை உருவாகலாம் என்பதால் அனைத்திலும் சற்று முன்னெச்சரிக்கையுணர்வோடு நடந்து கொள்வது அவசியம்.

விருச்சிகம்:

- Advertisement -

virichigam

விருச்சிக ராசிக்கு இந்த ஆண்டு குரு பகவான் அவர்களின் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமாரான நிலையே இருக்கும். நீங்கள் செய்த செயலுக்கு பிறர் பாராட்டுகளை பெற்றுவிடும் நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உங்களை வீழ்த்த மறைமுக சதிகளில் ஈடுபடுவார்கள். எனவே கவனம் தேவை. பணி சுமையால் சிலருக்கு உடல் நலம் பாதிப்பிற்குள்ளாகும். மனஅழுத்தங்களும் கூடும். உயரதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தராமல், உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பதவிகளும், கூடுதல் பொறுப்புகளையும் தருவார்கள். வேலையில் கிடைக்கும் வருமானம் சிலருக்கு போதுமானதாக இருக்காது.

கும்பம்:

- Advertisement -

Kumbam Rasi

சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு குரு பகவான் சற்று சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஜீவன ஸ்தானம் எனப்படும் 10 ஆம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். ஒரு சிலர் சக ஊழியர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு தேவையான நேரங்களில் அவர்களின் உதவி பெற முடியாத நிலை சிலருக்கு உண்டாகும். ஒரு சிலர் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். பணி தொடர்பாக சிலர் நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலை ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமாகும்.

இதையும் படிக்கலாமே:
பணம் விவகாரங்களில் கவனம் இருக்க வேண்டிய ராசிகள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasi jobs in Tamil. It is also called as 12 rasi in Tamil or Jothidam 12 rasi in Tamil or Velai vaippu jothidam in Tamil or Velai patri jothidam in Tamil.

- Advertisement -