உங்கள் ராசிப்படி இதை செய்தால் அமோகமாக வாழலாம் தெரியுமா ?

Astrology

பரிகாரங்கள் எனப்படுவது ஜோதிடக்கலையின் அடிப்படையில் நமக்கு ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளை, தாந்திரீக முறையில் சரி செய்துகொள்ளும் ஒரு வழிமுறையாகும். அந்த வகையில் இங்கு 12 ராசியினருக்கான பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசியினர் என்றென்றும் அதிர்ஷ்டங்கள் மற்றும் இதர நன்மைகள் ஏற்படுவதற்கு எப்போதும், எப்பொருளையும் இவர்கள் இலவசமாகவோ, தானமாகவோ பெறக்கூடாது. பணம் அல்லது வேறு ஏதாவது வகையில் அதற்கு விலைகொடுத்தே வாங்கி கொள்ள வேண்டும். இலவசமாக பெறுவது இவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்
Rishabam Rasi

ரிஷபம் ராசி சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த ராசியாகும். இந்த ராசியினர் தங்களின் தொழில் மற்றும் வியாபாரங்களில் எப்போதும் லாபங்களை பெறுவதற்கு சந்தனம், ரோஜா, ஜவ்வாது போன்ற நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை வெளியில் செல்லும் போது தங்கள் ஆடைகளில் பூசி செல்ல வேண்டும்.

மிதுனம்
midhunam

- Advertisement -

மிதுன ராசியினர் தாங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி பெறவும், அதிர்ஷ்டம் பெறவும் கோவில்களுக்கு செல்லும் போது இறைவனை வணங்கிய பின்பு, கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி உணவை தூவி அவற்றின் பசியை போக்கும் காரியத்தை செய்து வருவது நன்மையை அளிக்கும்.

கடகம்
Kadagam Rasi

சந்திர பகவானின் ராசியான கடகத்தில் பிறந்தவர்கள், சந்திர ஆதிக்கம் மிகுந்த உலோகமான வெள்ளியாலான சொம்பு அல்லது தம்பளரில், தினமும் காலை மற்றும் முன்னிரவு வேளைகளில் பசும்பால் அருந்துவது மிகுந்த அதிர்ஷ்டத்தை இந்த ராசியினருக்கு ஏற்படுத்தும்.

சிம்மம்
simmam

சூரியனின் ஆதிக்கம் மிகுந்த சிம்ம ராசியினர் தங்களின் பணி, தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக ஏற்பாடாகியிருக்கும் கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் நேர்காணல்களுக்கு செல்லும் போது, உங்கள் வீட்டில் உங்களுக்கு விருப்பமான இனிப்பு வகை அல்லது வேறு ஏதாவது உணவை சிறிது உண்டுவிட்டு செல்ல, போகின்ற காரியம் வெற்றியடையும்.

கன்னி
Kanni Rasi

புதனின் ஆதிக்கம் மிகுந்த இந்த ராசியினர் வசதி குறைவான பெண்களுக்கு மூக்குத்தி தானமளிப்பது அல்லது மூக்குத்தி அணிவிக்கும் சடங்கை செய்விப்பது இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்திற்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும். இதை செய்ய முடியாதவர்கள் அப்பெண்களுக்கு புது புடவைகளை தானமாக அளிக்கலாம்.

துலாம்
Thulam Rasi

சுக்கிரனின் முழு அருளையும் கொண்ட இந்த ராசியினர் தங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் மற்றும் சிறந்த நன்மைகளை பெற இவர்கள் வாழும் ஊர்களிலிருக்கும் கோவில்களில் நடக்கும் அன்னதானத்திற்கு வெண்ணை, தயிர் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவு பொருட்களை தானமாக அளித்து வருவது சிறந்தது.

விருச்சிகம்
virichigam

தேளை போன்று சட்டென்று முன்கோபத்தால் அனைவரையும் கொட்டிவிடும் குணம் கொண்ட இந்த ராசியினர், தங்கள் வீட்டில் மண்குடுவையில் தேனை பாதுகாத்து வைத்து, தினமும் காலையில் அக்குடுவையிலிருந்து சிறிது தேனெடுத்து சாப்பிட்டு வருவது உடல்நலத்தை மேம்படுத்தி அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

தனுசு
Dhanusu Rasi

பல திறமைகளை கொண்டு வாழ்க்கையை சமசீராக கொண்டு செல்லும் இந்த ராசியினர். தங்களின் தந்தை உயிரோடிருந்தால் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை இவர்களும் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அவர் காலமாகியிருந்தால் அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் போன்றவற்றை அலமாரியில் வைத்திருப்பது நன்மையை அளிக்கும்.

மகரம்
Magaram rasi

செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகர ராசியில் பிறந்தவர்கள், தங்களிடம் யாசகம் கேட்டு வரும் யாசகர்கள் மற்றும் ஏழைகளுக்கு வாழைப்பழம், பருப்பு வகைகள் மற்றும் இனிப்புகளை தானமாக அளிப்பது, நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியையும் மேன்மேலும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

கும்பம்
Kumbam Rasi

சனிபகவானின் ஆதிக்கம் மிகுந்த கும்ப ராசியினர், குபேர பகவானை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதோடில்லாமல், தங்களின் உடலில் தங்கத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு ஆபரணத்தை தொடர்ந்து அணிந்திருப்பது தெய்வங்களின் அநுகிரகத்தை பெற்று தரும். வாழ்வில் பல அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும்.

மீனம்
meenam

குரு பகவானின் நன்மையான ஆதிக்கம் மிகுந்த மீன ராசியில் பிறந்தவர்கள் புண்ணிய தீர்த்தங்கள் சென்று, அங்கிருக்கும் தீர்த்தத்தில் குளித்து பின்பு இறைவனை வணங்க வேண்டும். இந்த புண்ணிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பிறர் உங்களை பார்க்கும் வகையில் வெட்ட வெளியில் குளிக்க கூடாது. இப்படி வெட்ட வெளியில் குளிப்பது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கலாமே:
பரிகாரங்களை ஏன் செய்யவேண்டும். செய்ய முடியாவிட்டால் என்ன செய்யலாம்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 12 Rasi pariharam in Tamil. Mesha rasi pariharam in Tamil, Rishaba rasi pariharam in Tamil, Mithuna rasi pariharam in Tamil, Kadaga rasi pariharam in Tamil, Simma rasi pariharam in Tamil, kanni rasi pariharam in Tamil, Thulam rasi pariharam in Tamil, Viruchigam rasi pariharam in Tamil, Dhanusu rasi pariharam in Tamil, Magara rasi pariharam in Tamil, Kumba rasi pariharam in Tamil, Meena rasi pariharam in Tamil