உங்கள் ராசிப்படி எதை வழிபட்டால் நன்மைகள் பெருகும் தெரியுமா ?

astrology

இந்த உலகில் மனிதர்களும் பிற உயிர்களும் தோன்றுவதற்கு முன்பே செடிகள், கொடிகள், மரங்கள் தோன்றின. பிறகு வந்த மனிதன் அந்த தாவரங்கள் மற்றும் மரங்களில் தனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் இருப்பதைக் கண்டு அவற்றை நல்ல முறையில் தனக்கு உபயோகப்படுத்திக்கொண்டான். நமது நாட்டின் ஜோதிடத்திலும் மரங்களில் தெய்வீகத்தன்மை இருப்பதைக் கண்டு எந்தெந்த ராசியினர் எந்தெந்த மரங்களை வழிபட்டால் நன்மைகள் பெருகும் .என்ற குறிகுகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மேஷம்:

Mesham Rasiமேஷ ராசியினர் தல விருட்சமாக செஞ்சந்தனம் மரம். இன்றைய காலங்களில் அரசால் மிகவும் பாதுகாக்கப்படும் மரமாக இது இருப்பதால், இந்த விருட்சத்திற்கு பதிலாக வேங்கை மரத்தையும் வணங்கலாம். செவ்வாய் கிழமைகளில் செஞ் சந்தன மரத்தையோ அல்லது வேங்கை மரத்தையோ வழிபட்டு வர அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்:

Rishabam Rasiரிஷப ராசியினர் வழிபட வேண்டிய மரம் அத்தி மரமாகும். ஒரு சில கோவில்களில் இந்த அத்தி மரம் தல விருட்சமாக இருக்கிறது. அப்படிப்பட்ட கோவில்களில் சுப தினங்களில் அந்த அத்தி மரத்திற்கு நெய் விளக்கேற்றி அந்த மரத்தை 11 முறை சுற்றி வர இந்த ராசியினருக்கு நல்ல புத்திர பெரு மற்றும் தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும்.

தமிழ் காலண்டர் குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

மிதுனம்:

midhunamமிதுன ராசியினர் வழிபட வேண்டிய மரம் பலா மரம். பழந்தமிழரின் முக்கனிகளில் ஒன்றாக புகழப்பட்ட இந்த பலா மரம் தெய்வத்தன்மை வாய்ந்த ஒரு மரமாகும். இந்த மரத்தை புதன் கிழமைகளில் இந்த ராசியினர் வழிபட அவர்களின் உடல் நோய்கள் நீங்கும் மற்றும் நன்மக்கட் பேறு கிட்டும்.

கடகம்:

Kadagam Rasiகடக ராசியினர் சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட புரசை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஆலயங்களில், வளர்பிறை திங்கட்கிழமைகளில் அந்த மரத்திற்கு நெய் தீபம் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து வணங்க மன நலக் கோளாறுகள் மற்றும் உடலில் நீர் குறைபாடு சம்பந்தமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.

சிம்மம்:

simmamசிம்ம ராசியினர் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோவிலில் தல விருட்சமாக இருக்கும் குருந்த மரத்தை ஞாயிற்றுக்கிழமையன்று வழிபடுவதால் நல்ல தேக ஆரோகியத்தையும், மிக உயர்ந்த பதவிகளையும், நல்ல செல்வ வளத்தையும் பெற முடியும்.

கன்னி:

Kanni Rasiகன்னி ராசியினர் வழிபட வேண்டிய மரம் இந்திய நாட்டின் பூர்வீகமான, இறைத்தன்மை கொண்ட மாமரமாகும். காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதரின் கோவிலில் இருக்கும் 3500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாமரத்தை நாம் பௌர்ணமி தினங்களில் வழிபடுவதால் நமது அறிவாற்றல் சிறக்கும் மேலும் நமது முன்னோர்களின் ஆசியும் கிட்டும்.

துலாம்:

Thulam Rasiதுலாம் ராசியினர் தெய்வீகமான மணத்தை வீசும் மகிழம் பூக்களை தரும் மகிழ மரத்தை வெள்ளிக்கிழமைகளில் பசுநெய் தீபமேற்றி, சிறிது மஞ்சள் நிற நூலை அம்மரத்தில் சுற்றி பத்திகள் கொளுத்தி அம்மரத்தை 24 முறை சுற்றி வர வாழ்வில் என்றென்றும் குறையாத செல்வம் கிட்டும்.

விருச்சிகம்:

virichigamவிருச்சிக ராசியினர் செவ்வாய்கிழமைகளில் கருங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று மரத்திற்கு முன்பு சூடம் கொளுத்தி, சாம்பிராணி புகை காட்டி அம்மரத்தை 9 முறை சுற்றி வந்து வழிபட உடலில் இருக்கும் நோய்கள் நீங்கும் மற்றும் எதிராளிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

தனுசு:

Dhanusu Rasiதனுசு ராசியினர் வழிபட வேண்டிய மரம் அரச மரம். இதுவும் இந்திய நாட்டின் பூர்வீகமான மரங்களில் ஒன்று அக்காலம் தொட்டு இக்காலம் வரை இந்த மரமே பல இடங்களில் இறைவனாக வழிபடப்பட்டு வருகிறது. வியாழக்கிழமைகளில் இம்மரத்தை காலை வேளைகளில் வழிபாடு செய்து வர உடல், மனோ பலம் கூடும். இறை ஞானத்தை தரும்.

மகரம்:

Magaram rasiமகர ராசியினர் வழிபட வேண்டிய மரம் ஈட்டி மரம். தற்போது மிகவும் அருகி விட்ட இம்மரத்தை சட்டத்தால் பாதுகாக்கப்படும் மரமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இம்மரத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் பூரம் நட்சத்திரத்தன்று தீபமேற்றி வழிபட்டால் உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து குறைகளும் படிப்படியாக நீங்கும்.

கும்பம்:

Kumbam Rasiகும்ப ராசியினர் வழிபட வேண்டிய மரம் சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த வன்னி மரமாகும். இம்மரம் தமிழ் நாட்டின் பெரும்பாலான சிவாலயங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இம்மரத்தை சனிக்கிழமைகளில் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு இம்மரத்தை 8 சுற்றுகள் சுற்றி வர சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் குறையும்.

மீனம்:

meenamமீன ராசியினர் புன்னை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஆலயத்திற்கு வியாழக்கிழமைகளில் சென்று இம்மரத்திற்கு பசு நெய் தீபமேற்றி, தூபங்கள் காட்டி வணங்கி இம்மரத்தை 12 முறை சுற்றி வர திருமணத் தடை நீங்கும். உங்களில் பொருளாதார நிலையம் உயரும்.

குறிப்பு: மேலே 12 ராசியினருக்கும் அவரவர் ராசிக்கு வழிபடக் கூடிய மரத்தை பற்றி கூறப்பட்டிருந்தாலும், பிற ராசியினரும் மற்ற ராசியினரின் விருட்சங்களை அதன் பயன்களுக்கு ஏற்ப வணங்கலாம்.

ஜோதிடம் சம்மந்தமான தகவல்கள், தமிழ் காலண்டர் குறிப்புகள், திருமண பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.