Astrology : இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த வருமானம் பெறும் ராசியினர் யார்?

12-rasi
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செல்வம் தேவையாக இருக்கிறது. அந்த செல்வம் ஈட்ட அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டியிருக்கிறது. மனித வாழ்வில் அனைத்திலும் விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் இந்த 2019 ஆம் ஆண்டு எந்தெந்த ராசியனார்க்கு தொழில் சம்பந்தமான விடயங்களில் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

பல வகையான இன்பங்களை அனுபவிப்பதற்கென்றே பிறந்த ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு இவர்களின் ராசிக்கு குரு சாதகமான நிலையில் இருப்பதால் இவர்கள் செய்கிற தொழில் சிறப்பாக இருக்கும். பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பால் தொழில் சிறப்படைந்து உங்களுக்கு புகழும், புதிய வாடிக்கையாளர்களும் கிடைக்க பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும் சூழல் உண்டாகும். தங்களின் தொழில்களுக்கு திறமையான பணியாளர்கள் கிடைக்க பெறுவார்கள்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi

பிறரின் மனநிலை அறிந்து செயல்படும் சூட்சமம் அறிந்த கடகம் ராசியினருக்கு இந்த ஆண்டு தொழில் ரீதியாக பார்க்கும் போது சிறப்பான ஆண்டாகவே இருக்கும். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். அப்பயணங்களால் அதிக அனுகூலங்கள் இருக்கும். அரசாங்க வழியில் உங்கள் தொழிலுக்கு உதவிகள் கிடைக்க பெருவீர்கள். உங்கள் தொழில் கூட்டாளிகளின் சிறப்பான பங்களிப்பால் மிகுந்த லாபங்களை பெறுவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் சிறந்த வெற்றிகளை பெறும். தொழிலுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள்.

துலாம்:

- Advertisement -

Thulam Rasi

சுக்கிரனின் ஆட்சி வீடாக இருக்கும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு குரு பகவான் சாதகமான நிலையில் இருப்பதால் இதுவரை உங்கள் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாக விலகும். தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை விலகும். மிகுந்த லாபங்களை தரக்கூடியஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். ஒரு சிலர் தொழிலில் கிடைக்கும் லாபத்தை கொண்டு தொழிலை விரிவாக்கம் செய்யவும் அல்லது புதிய தொழிலில் முதலீடு செய்து அதில் லாபமும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொழில் ஒப்பந்தங்கள் சிலர் கிடைக்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்தாண்டு மிக சிறந்த பலன்களை பெறும் ராசியினர் யார்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasigal tholil palan in Tamil. It is also called as 12 rasis in Tamil or Jothidam 12 rasi in Tamil or Rasi jothidam in Tamil or Rasi tholil in Tamil.

- Advertisement -