Astrology : இந்தாண்டு மிக சிறந்த பலன்களை பெற போகும் ராசியினர் யார் தெரியுமா?

- Advertisement -

ஜோதிடம் என்பது நமது உடல் மற்றும் மனநிலையை ஆட்டிப்படைக்கும் விண்ணில் இருக்கும் நவகிரகங்களின் தன்மையை கொண்டு நமக்குள் ஏற்படவிருக்கும் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள உதவும் ஒரு வழிகாட்டியாகும். அந்த வகையில் இந்த 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் காலங்களில் எந்த ராசியினர் மிக சிறந்த பலன்களை பெற போகின்றனர் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

இதுவரை பல கஷ்டங்களை அனுபவித்து வந்த ரிஷப ராசியினர் இந்த வருடம் வரவிருக்கும் காலங்களில் நீங்கள் அதிகம் விரும்பிய பல நல்ல மாற்றங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படப்போவதை காணப்போகிறீர்கள். உங்களின் வழக்கமான பழைய விடயங்களை ஒதுக்கி வைத்து விட்டு புதுவகையான செயல்கள் மட்டும் சிந்தனைகள் போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகும் ஜூலை மாதத்திற்கு பிறகு உங்களுக்கு பொருளாதார ரீதியில் பல ஏற்றமிகு பலன்கள் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

simmam

இந்தாண்டு இதுவரை சென்ற தினங்களில் நீங்கள் கவனக்குறைவால் செய்த தவறுகள் என்ன என்பதை எண்ணி பார்த்து, வருங்காலங்களில் அது ஏற்படாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தொடங்கும் எத்தகைய ஒரு காரியங்களிலும் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்றாலும் முடிவில் அனைத்தும் நன்மையாக மாறும். இதுவரை பொருளாதார விடயங்களில் சற்று சிரமங்களை சந்தித்து வந்த இந்த ராசியினர் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களுக்கு பிறகான காலங்களில் செல்வம் அதிகம் சேர்க்கும் நிலை உண்டாகும்.

மகரம்:

- Advertisement -

Magaram rasi

எதையும் தீர ஆலோசித்து அதே நேரத்தில் செயலில் அதிவேகம் காட்டும் மகர ராசியினருக்கு இந்த ஆண்டு தற்போது வரை மிகப்பெரிய லாபங்கள் அல்லது மிகப்பெரும் நஷ்டங்கள் ஏற்படாமல் ஒரு சராசரியான நிலையே இருக்கிறது. இந்தாண்டு வராவிருக்கும் காலங்களில் எவரும் துணிந்து செயல்படாத விடயங்களில் நீங்கள் முதன்முதலாக செயல்பட்டு பல சாதனைகள் புரிவீர்கள். உங்களின் எதிரிகள் உங்களின் செயல்திறனை கண்டு அஞ்சி ஒதுங்குவார்கள். புதிய மனிதர்களின் நட்பால் உங்களுக்கு பல ஆதாயங்கள் இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதார ரீதியில் மிக சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும்

இதையும் படிக்கலாமே:
இந்த வருடம் யார் அதிக நன்மைகள் பெற போகின்றனர்?

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sirandha palan rasigal in Tamil. It is also called as 12 rasigal in Tamil or Jothidam rasi in Tamil or Rasi palan jothidam in Tamil or Jothidam rasi palangal in Tamil.

- Advertisement -