உங்கள் ராசிக்கு நீங்கள் எந்த நிற கயிறு அணிந்து கொண்டால் தெய்வீக சக்தி உங்களுக்குள் அதிகரிக்கும் தெரியுமா? 12 ராசிகளுக்குரிய அதிர்ஷ்ட கயிறு!

astro-kayiru
- Advertisement -

பொதுவாக கண் திருஷ்டி எதுவும் ஏற்படாமலிருக்க காலம் காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தெய்வீக சக்தி பொருந்தியுள்ள கருப்பு நிற கயிற்றை கையில் மற்றும் கழுத்தில் அணிந்து கொள்வது வழக்கம். ஒரு சிலர் கால்களில் கூட இவற்றை அணிந்து கொள்வதை பார்த்திருப்போம். கருப்பு நிற கயிறை கையில் கட்டிக் கொண்டால் நம்மை எந்த விதமான துஷ்ட சக்தியும் அணுகாது என்பது நம்முடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையே பலம் கொடுக்கும் வகையாகவும் அமைந்திருக்கிறது. இத்தகைய நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கயிற்றை எந்த நிறத்தில்? எந்த ராசிக்காரர்கள் அணிவது சிறப்பு? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்கள் ராசியின் படி சிகப்பு நிற கயிறை அணிந்து கொள்வது மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். சிந்தனைத் தெளிவுற்று ஆன்மீக வழியில் செல்ல உதவும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் ராசியின் படி மஞ்சள் நிற கயிற்றை அணிந்து கொள்வது மிகுந்த நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். மங்களகரமான நிகழ்ச்சிகள் கைகூட எப்பொழுதும் மஞ்சள் நிற கயிற்றை கையில் அணிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்கள் ராசியின் படி பச்சை நிற கயிற்றை அணிந்து கொள்வது சிறப்பு. புத பகவானுக்கு உகந்த பச்சை நிற கயிறு நீங்கள் அணிந்து கொள்ள புத்தி தெளிவு உண்டாகும். ஆத்ம பலம் கூடி இறை சிந்தனை அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் ராசியின் படி மஞ்சள் நிறத்தை அணிந்து கொள்வது சிறப்பு. சுபகாரியத் தடைகள் விலகி, எண்ணிய எண்ணங்கள் ஈடேற எப்பொழுதும் கையில் மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டிருங்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்களுடைய ராசியின் படி ஆஞ்சநேயருக்கு உகந்த செந்தூர நிற கயிற்றை அணிந்து கொள்வது சிறப்பு. ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் எப்பொழுதும் கையில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இருங்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் ராசியின் படி பச்சை நிற கயிற்றை அணிந்து கொள்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களை விலக்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க பச்சை வண்ணக் கயிறு உங்கள் ராசிக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் ராசியின் படி மஞ்சள் நிற கயிறு அணிவது சிறப்பு. மங்களகரமான இந்த மஞ்சள் நிற கயிறு உங்கள் கைகளில் எப்பொழுதும் இருந்தால் எத்தகைய தடைகளும் விலகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் ராசிக்கு நீங்கள் நினைத்ததை அடைய சிகப்பு நிற கயிற்றை அணிந்து கொள்ளுங்கள். எவரையும் எதிர்க்கும் துணிச்சல் பெற, சிகப்பு நிற கயிறு உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் உங்கள் ராசிக்கு மஞ்சள் நிற கயிற்றை அணிந்து கொள்வது நல்லது. நீங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு அனைவரிடமும் அன்பாக பழக இந்த மஞ்சள் நிற கயிறு உதவி செய்யும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் உங்கள் ராசிக்கு நீங்கள் கருப்பு நிற கயிறு அணிவது சிறப்பு. எல்லா ராசிக்காரர்களும் பொதுவாக கருப்பு நிற கயிற்றை அணிந்து கொள்ளலாம். குறிப்பாக மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் கருப்பு நிற கயிறு அணிந்து கொள்ள அதிர்ஷ்டம் பெருகும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் உங்கள் ராசிக்கு நீங்கள் கருப்பு நிற கயிறு அணிந்து கொள்வது நல்லது. கருப்பு உங்களுக்கு வர இருக்கும் எல்லா ஆபத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். எனவே எப்பொழுதும் கையில் கருப்பு கயிறு கட்டி கொண்டிருங்கள்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் உங்கள் ராசிக்கு நீங்கள் மஞ்சள் நிற கயிறு அணிந்து கொள்வது சிறப்பு. மஞ்சள் கயிறு மங்களகரமானது என்பதால் மீன ராசி மட்டுமல்ல, எல்லா ராசியினரும் மஞ்சள் கயிற்றையும் அணிந்து கொள்ளலாம். கருப்பு மற்றும் மஞ்சள் கயிறு அனைவருக்கும் பொதுவானது. மற்ற நிறங்கள் அவரவர்கள் அதிர்ஷ்டத்திற்கு உரிய நிறங்கள் ஆகும்.

- Advertisement -