சென்னை ரத்னா கஃபே இட்லி சாம்பார்

- Advertisement -

சாம்பாரை பொருத்த வரையில் எத்தனையோ வகைகள் உண்டு? டிபனுக்கு ஒருவகையாகவும் சாப்பாட்டுக்கு ஒருவகையாகவும் காய்கறிகள் சேர்த்தும், சேர்க்காமலும் சாம்பார் செய்வோம். என்ன தான் நாம் வீட்டில் இப்படி வகை வகையாக செய்தாலும் கூட ஹோட்டலில் கிடைக்கும் சாம்பாரின் சுவை அலாதியானது தான். ஹோட்டலில் கிடைக்கும் இந்த சாம்பாருக்காகவே சாப்பிடும் பலர் உண்டு.

அந்த வகையில் சென்னையின் பிரபல ஹோட்டலான ரத்னா காஃபேயில் செய்யப்படும் இந்த இட்லி சாம்பாரை வீட்டிலே எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த சாம்பார் ரெசிபி தெரிந்து கொண்டு நீங்களும் வீட்டில் இதை செய்து அசத்துங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 3/4 கப்
பூசணிக்காய் -1 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
தனியா -1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 2
கடுகு -1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

இந்த சாம்பார் செய்ய துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் மஞ்சள் தூள் பூசணிக்காய் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து பருப்பு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூன்று விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைத்து விடுங்கள் இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து நிறம் மாறாமல் வாசம் வரும் வரை வறுத்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டியாக பயன் பேஸ்ட்டாக அழைத்து வைத்து விடுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு நிறம் மாறியவுடன் தக்காளியும் சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

மசாலாவின் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதித்த பிறகு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு வேக வைத்த பூசணிக்காய் பருப்பு இரண்டையும் மசித்து இதில் சேர்த்த பிறகு வெல்லம், உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை காத்திருங்கள்.

இதையும் படிக்கலாமே: காரசாரமான குடைமிளகாய் சட்னி செய்முறை

அதன் பிறகு கடைசியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள் நல்ல கமகமவென்று வாசத்துடன் ரத்னாக்காவை இட்லி சாம்பார் சுவையாக வீட்டில் தயார்.

- Advertisement -