வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை பூஜையில் சம்பாதிக்கும் பணத்தை இப்படி வைத்தால் மட்டும் போதுமே?

cash-pooja-room

வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது பழமொழி. அது போல் பணத்தை பணம் தான் இருக்கும் என்பதும் பழமொழி தான். நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள்! எங்கே பணப் புழக்கம் அதிகமாக இருக்கிறதோ! அங்கே தான் மீண்டும் மீண்டும் பணம் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். அதிகமாக எங்கு பணம் கொழிக்கிறதோ! அந்த இடத்தில் தடை இல்லாமல் பணமானது மழையாக பொழிந்து கொண்டே இருக்கும். ஆனால் பணம் இல்லாத ஒரு இடத்தில், வருகின்ற பணமும், வீணாக விரயம் ஆகிக் கொண்டே இருக்கும்.

money

இதுவே பணத்தைப் பற்றிய தீர்க்க முடியாத மர்ம முடிச்சாக இன்று வரை இருக்கிறது. உங்களுக்கு கடின உழைப்பு இருந்தாலும், பண வரவு வந்து கொண்டே இருந்தாலும் ஒரு புறம் அது வீணாக நமக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் செலவாகிக் கொண்டே இருக்கும். இதற்கு வீட்டில் நாம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜைகள் செய்யும் பொழுது பணத்தை இப்படி செய்ய வேண்டும். அப்படி என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நாம் சில பொதுவான ஆன்மீக விசேஷங்கள், விழா, பண்டிகைகள் என்று வரும் பொழுது பூஜைகள் செய்வது வழக்கம். அப்படி செய்யும் பூஜைகளில் ஒன்றை கவனித்து பார்த்திருக்கிறோமா? ஒவ்வொரு விசேஷ பூஜைகளுடன் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் ஒரு விஷயம் பணம் தான். பணத்தை வைத்து பூஜை செய்வது வீட்டில் மேலும் மேலும் பணத் தடை இல்லாமல் பணம் மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்பதால் தான் அவ்வாறு செய்யப்படுகிறது.

money

பணம் மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் பணம் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். பணத்துடன், நாணயங்களும் பூஜையில் இடம் பெற்றிருப்பதை நாம் கவனித்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். பணத்துடன், நாணயங்களையும் சேர்த்து பூஜை செய்வதால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இது நாம் மகா லட்சுமி தேவிக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதையாக கருதப்பட்டு வருகிறது. இதே சூட்சுமத்தை தான் நாம் அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது நமக்கு அதிகமான பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

ஒவ்வொரு வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை அல்லது அன்றாட பூஜைகள் செய்யும் பொழுது பணத்துடன் நாணயத்தை சேர்த்து இப்படி வைக்க வேண்டும். இதற்கு பச்சை நிறத்தில் ஆன ஒரு பட்டுத் துணி தேவைப்படுகிறது. பச்சை நிறம் என்பது பணத்தை ஈர்க்கக் கூடிய நிறம் என்பது விதியாகும். பச்சை நிற பட்டுத் துணியை பூஜை அறையில் விரித்து வைக்க வேண்டும். அதில் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பச்சை கற்பூரம் என்பது சாதாரண கற்பூரம் அல்ல. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கப் பெறுகிறது.

pachai karpooram

ஒரு சிறிய டப்பா 30 ரூபாய்க்குக் கூட கிடைக்கப் பெறுகிறது. அதனை வாங்கி வைத்துக் கொண்டால் பூஜையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து தீப, தூப, ஆராதனைகளைச் அதற்கும் சேர்த்து காண்பிக்க வேண்டும். பணத்திற்கு ஆராதனை காண்பிக்கும் பொழுது, ‘ஓம் மஹா லட்சுமியை போற்றி’ என்று 9 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் இருக்கும் பணத் தடைகள் நீங்கி, வருமானம் பெருகி, தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு அவைகள் விருத்தியாகி, நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
வேண்டுதல் உடனே நிறைவேற, கஷ்டங்கள் உங்களை விட்டு உடனடியாக விலக, கிராம்பு மாலை கட்டும் சரியான முறை இது தான்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.