பாவங்கள் தீர ரத சப்தமி

suriya bhagavan wheat ilai
- Advertisement -

சூரிய பகவானை வழிபடும் நாளில் மிக முக்கியமான நாள் எனில் அது இந்த ரத சப்தமி தினம் தான். தை மாதத்தில் வரும் அமாவாசைக்கு ஏழாவது நாளான வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமி எனப்படும். இது எப்போதும் தை மாதத்திலே தான் வரும். இந்த வருடம் அமாவாசை திதி தள்ளி வந்ததால் ரதசப்தமி மாசி மாதத்தில் வந்துள்ளது. இந்த நாளில் தான் சூரிய பகவான் அவதரித்ததாக புராண கதைகள் உள்ளது.

இந்த ரத சப்தமி திதியானது 15.2.24 அன்று மாலை 4:30 மணிக்கு தொடங்கி நாளைய தினம் 16.2.24 மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது. எப்பொழுதும் சூரியன் உதிக்கும் நேரத்தில் இருக்கும் திதியை தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆகையால் இந்த ரத சப்தமி வழிபாட்டை நாளைய தினத்தில் செய்வது தான் சிறந்தது.

- Advertisement -

பாவங்கள் தீர ரத சப்தமி

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும் சூரிய ஒளியில் ஜீவிக்கப்படுவதால் கிரகங்களிலே சூரிய பகவான் முக்கியமானவராகவும் முதன்மையானவராகவும் கருதப்படுகிறார். சூரிய பகவானுடைய தேர் வடக்கு அறைக்கோளத்தில் நகர்கிறது என்பதை உணர்த்தும் நாள் தான் ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலிருந்து வெப்பம் அதிகரிக்கும்.

சரி இப்போது இந்த ரத சப்தமி நாளை நம்முடைய பாவங்கள் தீர்த்துக் கொள்ள எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று ஆன்மீகம் குறித்த பார்க்கலாம். இன்றைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டாயமாக கண் விழித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக தலை ஸ்தானம் செய்ய வேண்டும். இந்த சூரிய உதய நேரம் காலண்டரில் இருக்கும் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி குளிக்கும் வேளையில் கையில் 9 எருக்கம் இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் அந்த எருக்கம் இலையில் சிறிது கருப்புஎள்ளையும் விபூதியும் வைத்து அந்த எருக்க இலையை தலையில் வைத்து தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும். பெண்கள் குளிக்கும் பொழுது விபூதிக்கு பதிலாக மஞ்சளை சேர்த்து வைத்து குளிக்க வேண்டும். இது பாவங்கள் தொலைய நாம் குளிக்கும் முறையாக கருதப்படுகிறது.

அதன் பிறகு நேராக பூஜை அறையில் வந்து தீபம் ஏற்றி சூரிய பகவானை மனதார நினைத்து வணங்க வேண்டும். அந்த நேரத்தில் ஓம் ஆதித்யா நமஹ என்ற இந்த நாமத்தை மூன்று முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு சூரிய ஒளிபடும் இடத்தில் நாம் ஐந்து நிமிடம் சூரிய பகவானை வணங்கியவாறு நிற்க வேண்டும். அந்த நேரத்தில் சூரிய பகவானை பார்த்து ஓம் ஆதித்யா நமஹ என்ற இந்த நாமத்தை மூன்று முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

அத்துடன் நாளைய தினத்தில் சூரிய பகவானுக்கு உகந்த தானியமான கோதுமையை உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கோதுமை சேர்த்த உணவை ஏதேனும் ஒரு வேலையாவது உண்ண வேண்டும். இவை அனைத்திலும் விட முக்கியமானது அன்னதானம் செய்வது. நாளைய சப்தமி தினத்தில் வயதில் மூத்தோர், ஏழை எளியவருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும்.

அப்படி அன்னதானம் செய்யும் வேலையிலும் ஓம் ஆதித்யா நமக என்ற இந்த நாமத்தை மூன்று முறை சொல்லுங்கள். நாளைய தினத்தில் இந்த குளியல் சூரிய வழிபாடு அன்னதானம் இவையெல்லாம் தவறாமல் செய்யும் போது நம்முடைய பாவங்கள் தொலையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தெரியாமல் செய்த பாவங்கள் தொலைய நிறைய பரிகாரங்கள் இருக்கிறது.

தெரிந்தே செய்த பாவங்களும் குறைய இது போன்றதொரு அற்புதமான தினங்கள் மட்டுமே உள்ளது. அதை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாளைய தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அவரவர் முறைப்படி செய்யலாம். அத்துடன் சேர்த்து இந்த முறைகளையும் பின்பற்றலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே: இழந்ததை திரும்ப பெற வழிபாடு

தெரிந்து செய்த பாவங்களும் தொலையும் என்பதால் தெரிந்தே பாவங்களை செய்து விடக் கூடாது. சூழ்நிலை காரணமாக செய்யக் கூடாது என்று தெரிந்தும் சில நேரங்களில் செய்யக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவோம். அது போன்ற தொரு விஷயங்கள் சரியாகத் தான் இது போன்றதொரு வழிபாடு பரிகாரம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -