ரேஷன் கோதுமையை வைத்து, ஒரு முறை மாவை, இப்படி அரைத்து தான் பாருங்களேன்! கடையில் இருந்து காசு கொடுத்து கோதுமை வாங்கவே மாட்டீங்க!

Ration gothumai

ரேஷனிலிருந்து வாங்கும் கோதுமையை இப்போதெல்லாம் நம் வீடுகளில் பயன்படுத்துவதே கிடையாது. நம்மில் பலபேர், கடையில் இருந்து தான் காசு கொடுத்து கோதுமை மாவை வாங்கி, சப்பாத்திக்கும் பூரிக்கும் பயன்படுத்தி வருகின்றோம். ரேஷனில் இருந்து வாங்கிய கோதுமையை கூட, கடையிலிருந்து வாங்கிய கோதுமை மாவு போல அரைக்க முடியும். நம் கையாலேயே கோதுமையை வாங்கி அரைக்கும் மாவில் தான், ஆரோக்கியமும் அதிகம். சுவையும் அதிகம். ரேஷன் கோதுமையை எப்படி சுத்தம் செய்வது? அதனுடன் என்னென்ன பொருட்களை, எந்தெந்த அளவில் சேர்த்து அரைத்தால் மாவு மிருதுவாக இருக்கும், என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

wheat

முதலில் ரேஷன் கடையில் இருந்து வாங்கிய கோதுமையை, முறத்தில் போட்டு, நன்றாக புடைத்து சுத்தம் செய்யவேண்டும். இப்படி சுத்தம் செய்தாலே, கோதுமையில் இருக்கும் பாதி தூசு நீங்கிவிடும். அதன்பின், கோதுமையில் வேறு சில குச்சி, கல், இருந்தால் அதை நீக்கிவிடுங்கள். அதன் பின்பு தண்ணீரை ஊற்றி, ஐந்திலிருந்து, 6 முறை உங்கள் கைகளால் அலசி எடுக்க வேண்டும். அதாவது கோதுமையை கைகளில் நிமிடி கழுவ வேண்டும். நிமிடி கழுவவும் பட்சத்தில், அதில் இருக்கும் தூசு,  தும்பு அனைத்தும் நீங்கிவிடும். இறுதியாக நல்ல தண்ணீரை ஊற்றி கோதுமையை, அந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம்.

15 நிமிடங்கள் ஊறிய கோதுமையை, ஒரு சல்லடையில் போட்டு, நன்றாக தண்ணீரை வடிய விட்டு, இறுதியாக வெயிலில், ஒரு காட்டன் துணியை விரித்து விட்டு, உங்கள் வீட்டில் ஒரு கயறுகட்டில் போல், ஏதாவது இருந்தால் கூட, அதன் மேல் துணி விரித்து விட்டு, கோதுமையை நன்றாக இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வெயிலில் உலர விட வேண்டும். அப்போதுதான் மாவு அரைத்து வைத்தால் கூட, சீக்கிரம் கெட்டுப் போகாது. கோதுமையில் ஈரப்பதம் இருந்தால், அரைத்த மாவில் வண்டு, பூசணம் வந்துவிடும்.

Gothumai

இப்போது உங்களிடம் சுத்தம் செய்த 5 கிலோ கோதுமை உள்ளது. 5 கிலோ, கோதுமைக்கு மக்காச்சோளம் 250 கிராம், பொட்டுக்கடலை 100 கிராம், வெள்ளை சோயா பீன்ஸ் 250 கிராம், உளுந்து 100 கிராம், பார்லி அரிசி 100 கிராம், வெள்ளை சோளம் 500 கிராம் என்ற அளவுகளில், கோதுமை மாவோடு சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து கோதுமை மாவை அரைத்துக் கொள்ளுங்கள். (மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம், சரியான அளவு வாங்கி, 5 கிலோ கோதுமையில் கொட்டி கலந்து, ரைஸ் மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்)

- Advertisement -

கடையில் உள்ள மிஷினில் அரிசி மாவு, கேவுரு மாவு போட்ட பின்பு எக்காரணத்தைக் கொண்டும் கோதுமை மாவைப் போட்டு அரைத்து விடக்கூடாது. உளுந்த மாவு, அரைத்த பின்பாக, கோதுமை மாவு அரைப்பது நல்லது. ஏனென்றால் மிஷினில், ஒட்டிக்கொண்டிருக்கும் அரிசி மாவும், கேவுரு மாவும் கோதுமை மாவுடன் கலந்து விட்டால், சப்பாத்தி மிருதுவாக வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Gothumai

ரைஸ் மில்லில் கோதுமையை கொடுத்து கூடவே நின்று, பக்குவமாக அரைத்து எடுத்து வருவது நல்லது. அதன் பின்பாக, அரைத்த மாவை, சூட்டோடு எக்காரணத்தைக் கொண்டும் டப்பாவில் போட்டு, மாவை அடைத்து விடக்கூடாது. ஒரு பெரிய பேப்பரில் பரவலாகக் கொட்டி, காயவைத்து அதன் பின்பு, ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டீர்கள் என்றால், மாவு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gothumai

இப்படி அரைத்த மாவில், சப்பாத்தியையும், பூரியையும் ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை நிச்சயம் அருமையாக இருக்கும். ரேஷனில் வாங்கிய கோதுமையில் சப்பாத்தி செய்தீர்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. ரேஷன் கோதுமையை பயன்படுத்துபவர்கள், கொஞ்சம் சிரமம் பார்க்காமல், மேல் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றினால், அதிக செலவில்லாத சுவையான சப்பாத்தி கிடைக்கும். சரி உங்களுக்கு ரேஷன் கடை கோதுமை தேவை இல்லை என்றாலும், கடையில் வாங்கிய கோதுமையாகயாக இருந்தாலும், இந்தக் குறிப்பை பின்பற்றி மாவை அரைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.