ரேஷன் அரிசி இருந்தா போதும் செலவே இல்லாத சுவையான முறுக்கு வீட்டிலேயே இப்படி செய்து வைத்துக் கொள்ளலாமே!

- Advertisement -

வீட்டில் ரேஷன் அரிசியை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லையா? இந்த முறையில் முறுக்கு பிழிய மாவாக அரைத்து வைத்துக் கொண்டால் 10 நாட்கள் ஆனாலும் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். சாதாரணமாக கடைகளுக்கு சென்று முறுக்கு வாங்க ஆகும் செலவைக் காட்டிலும், ரேஷன் அரிசியை வைத்து செய்யும் இந்த முறுக்கு செய்ய ஆகும் விலை குறைவு தான். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு இந்த முறுக்கு நல்ல நொறுக்கு தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை எப்படி செய்வது? என்பதை பார்க்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ration-rice

ரேஷன் அரிசி முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
ரேஷன் அரிசி – இரண்டு படி
சாப்பாடு அரிசி – ஒரு படி
காய்ந்த மிளகாய் – 20

- Advertisement -

உடைத்த கடலை – ரெண்டு படி
ஓமம் – ஒரு கைப்பிடி
எள்ளு – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவிற்கு

rice-murukku

ரேஷன் அரிசி முறுக்கு செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு படி ரேஷன் அரிசியை கல், குருணை நீக்கி சுத்தம் செய்து பின்னர் நாலைந்து முறை நன்கு அலசி நல்ல தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சாப்பாடு அரிசியையும் அலசி சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் சேர்ந்து சுமார் 5 மணி நேரமாவது ஊற வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 20 காய்ந்த மிளகாய்களை போட்டு நன்கு பேஸ்ட் போல் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல மிக்ஸி ஜாரில் உடைத்த கடலையும் போட்டு நன்கு நைசாக மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கிரைண்டரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து 5 நிமிடம் நன்கு அரைக்க வேண்டும். தேவையான பொழுது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரைத்து வைத்த மிளகாய் பேஸ்ட் கலந்து அரைக்க விடுங்கள். சிறிது நேரம் அரைபட்டதும் ஒரு கைப்பிடி அளவிற்கு ஓமம் மற்றும் ஒரு கைப்பிடி அளவிற்கு எள் கலந்து அரைக்க வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

pottu-kadalai

பின்னர் மாவுடன் அரைத்து வைத்துள்ள பொட்டுக் கடலை மாவை சேர்த்து முறுக்கு பிழியும் அளவிற்கு மாவு நல்ல கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் கை நனைத்து தொட்டுப் பார்த்தால் மாவு கைகளில் ஒட்டக் கூடாது. அந்த அளவிற்கு நன்கு கெட்டியாக கைகளால் பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முறுக்கு பிழியும் பொருளில் மாவை கொஞ்சமாக எடுத்து போட்டு, சூடாக இருக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிய வேண்டியது தான். எள்ளு, ஓமம் கலந்த இந்த ஆரோக்கியமான முறுக்கு செய்வதற்கும் எளிதாக இருக்கும்.

rice-murukku1

உங்களிடமிருக்கும் ரேஷன் அரிசியை எப்பொழுதும் வீணாக்க வேண்டாம். இது போல் முறுக்கு பிழிவதற்கு, ஸ்னாக்ஸ் வகைகள் செய்வதற்கும் சாதாரண அரிசியை காட்டிலும் ரேஷன் அரிசியை பயன்படுத்தி செய்யும் பொழுது அதன் மகத்துவமும் அலாதியானது தான். எதையாவது மென்று கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -