ரேஷன் கோதுமையுடன் இந்த 2 பொருள் சேர்த்து இப்படி ஒரு முறை அரைச்சு பாருங்க! ஆச்சரியப்படும் அளவிற்கு சப்பாத்தி, பூரி ரொம்பவே சாஃப்டா வரும்.

- Advertisement -

ரேஷன் கோதுமையில் சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றிற்கு மாவு அரைப்பது பெரும் அக்கப்போராக இருக்கும். ஆனால் அதனுடன் இந்த இரண்டு விஷயங்களை சேர்த்து அரைத்து பாருங்கள். வீட்டிலேயே ஹோட்டலில் சுடுவது போல பூரி புஸ் என்றும், சப்பாத்தி சாஃட்டாகவும் வந்து விடும். கடையில் வாங்கிய கோதுமையை விட நாமே தயாரிக்கும் இந்த கோதுமை உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் நாம் சேர்க்க இருக்கும் இந்த இரண்டு பொருட்களும் உடலுக்கு அதிக நன்மை தர கூடியவையாக இருக்கின்றன. அந்த ரகசியத்தை இந்த பதிவின் மூலம் பார்த்து விடுவோமா?

wheat

ரேஷனில் தரும் கோதுமை உடலுக்கு ஆரோக்கியம் தருபவையாக இருக்கின்றன. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதனால் பெரும்பாலானோர் ரேஷன் கடையில் வாங்கும் கோதுமையை வீணடிக்கின்றனர். ஆனால் உண்மையில் ரேஷன் கோதுமையை சுத்தம் செய்வதும், அதை அரைத்து சப்பாத்தி, பூரி செய்வது மிகவும் சுலபமான முறையாகும். கோதுமையை அப்படியே அரைக்காமல் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து அரைப்பதால் சப்பாத்தி மிகவும் மெத்தென்று வரும்.

- Advertisement -

5 கிலோ அளவிற்கு ரேஷன் கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பெரிய ஓட்டை உள்ள இரும்பு சல்லடையில் கல், குருணை நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ரேஷனில் தரும் கோதுமையில் நிறைய கற்கள் மற்றும் மண் துகள்கள் இருக்கும். சல்லடையில் சலிக்கும் பொழுது, உங்களுக்கு பாதி அளவிற்கு கல், குருணை நீங்கி சுத்தமான கோதுமை கிடைத்து விடும். அதன் பின்பு அந்த கோதுமையை மூன்றிலிருந்து நான்கு முறை தண்ணீரில் நன்கு களைந்து கொள்ள வேண்டும்.

wheat

நீங்கள் ஒவ்வொரு முறை தண்ணீரில் களையும் பொழுது கோதுமையில் இருக்கும் கோதுமையின் தோலும், திப்பிகளும் மேலே மிதக்கும். அவற்றை வடிகட்டி விட்டு சுத்தமான கோதுமையை எடுத்து கொள்ள வேண்டும். இப்போது மீதமுள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்க வேண்டும்.

- Advertisement -

கோதுமையை காய வைக்கும் பொழுது இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். அந்த இரண்டு பொருட்கள் என்ன தெரியுமா? வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயாபீன். வெள்ளை கொண்டைக் கடலை 250 கிராம், வெள்ளை சோயாபீன் 250 கிராம் என்கிற அளவில் கசடுகள் நீக்கி சுத்தம் செய்து கொண்டு வெயிலில் கோதுமையுடன் காய வைக்க வேண்டும். தண்ணீரில் கழுவ வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் இவைகள் மூன்றையும் ஒன்றாகக் கலந்து மெஷினில் கொடுத்து அரைத்து கொண்டு வர வேண்டும்.

kodai-kadalai-soya-bean

அரைத்து வந்த கோதுமையை பார்க்கும் பொழுதே நிறம் மாறாமல் பொன்னிறமாக நன்றாக இருக்கும். கருப்பு கொண்டை கடலையை சேர்த்தால் நிறம் மாறி விடும் அதனால் வெள்ளை கொண்டைக் கடலையை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கோதுமை மாவு ஆறியதும் மாவு சலிக்கும் சல்லடையில் சிறிது சிறிதாகப் போட்டு சலித்து எடுத்தால் கோதுமையில் இருக்கும் கழிவுகள் கழிந்து சுத்தமான கோதுமை மாவு கிடைத்து விடும்.

- Advertisement -

wheat-flour

இந்த கோதுமையில் பூச்சிகள் வண்டுகள் சீக்கிரம் வராமல் இருக்க ஒரு சிறிய வெள்ளைத் துணியில் 4 வரமிளகாய்களை போட்டு கட்டி மாவில் ஓரமாக வைத்து விட வேண்டும். இந்த மாவிலிருந்து நீங்கள் பூரி, சப்பாத்தி, கோதுமை தோசை என்று செய்து பார்த்தால் கடையில் வாங்கிய கோதுமை மாவை விட சிறப்பாகவே வரும். குறிப்பாக சப்பாத்தி செய்ய இந்த கோதுமை மாவு உகந்ததாக இருக்கும். ஒருமுறை செய்து வைத்து விட்டால் மூன்று மாதங்கள் வரை தாராளமாக நீங்கள் பயன்படுத்தலாம். அப்புறம் என்னங்க இனிமே கோதுமை மாவு கடையில் வாங்குவீர்களா என்ன?

இதையும் படிக்கலாமே
சமையலில் உங்களுக்கு தெரியாத சில ரகசியங்களும், அதன் தேவைகளும்! தெரிந்தால் ஆச்சரியபடுவீர்கள்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -