சமையலில் உங்களுக்கு தெரியாத சில ரகசியங்களும், அதன் தேவைகளும்! தெரிந்தால் ஆச்சரியபடுவீர்கள்.

cooking
- Advertisement -

பொதுவாகவே சமையலைப் பொறுத்தவரை நிறைய ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. டிசைன் டிசைனாக நாம் சமையல் செய்தாலும், நாம் விரும்பி சமைக்க நினைக்கும் சிலருடைய கை பக்குவம் நமக்கு வருவதே இல்லை. அம்மாவின் கைப்பக்குவம் அந்த தாயின் பிள்ளைகளுக்கு கூட வருவதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் செய்வதை அருகில் நின்று பார்த்தால் கூட அதே போல் நாமும் செய்தால் ருசி வருவதில்லை. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கைபக்குவம் என்பது சிறுசிறு ரகசியங்களை உள்ளடக்கியது ஆகும்.

Cook Apprentice

சமையல் என்பது ஒரு கலை. அதில் கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் சிறு சிறு விஷயங்கள் தான். எதையெல்லாம் போட வேண்டும் என்பது தெரிந்து விட்டால் மட்டும் நீங்கள் சூப்பராக சமைத்து விட முடியாது. அதை எப்படி போட வேண்டும்? என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது. அது போல் சிறு சிறு விஷயங்கள் செய்வதில் சில பொருட்களை சேர்த்தால் அதன் ருசியும், பயனும் அபாரம் ஆகிவிடும். அப்படியான சில குறிப்புகளை தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

- Advertisement -

1. சாம்பார் வைக்க போகிறீர்கள் என்றால் துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு சிறிதளவு தட்டிப் போட்டால் அவ்வளவு மணமாக வீடே மணக்கும். பருப்பும் வேகமாக வெந்து விடும். சாம்பாரின் ருசியும் அலாதியாக இருக்கும்.

thordal

2. விசேஷ நாட்களில், பூஜை செய்யும் நாட்களில் என்று வடை சுடுவது வழக்கமாக வைத்திருப்போம். அப்படி மெதுவடை சுடும் பொழுது மீந்து விட்டால் மிகவும் மனம் வருத்தமாக இருக்கும். ஏனென்றால் சமையல் எண்ணெய் லிட்டர் 100 ரூபாய்க்கு விற்கிறது. இதை கொதிக்கும் சாம்பார் அல்லது ரசத்தில் போட்டு மறுநாள் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

3. பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்து பாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு பின் நீரை வடித்து புளித்த தயிர் தேவையான அளவிற்கு சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து விடவும். பின் வெயிலில் வற்றல் போல் காய வைத்து விடவும். இந்த வற்றலை வத்த குழம்பு செய்யவும், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் பொரித்து சாப்பிடலாம்.

pavakkai

4. சில பேரது சமையலறையில் எப்போதும் ஈக்கள் மொய்த்த வண்ணம் இருக்கும். ஈக்களை எப்படியடா விரட்டுவது? என்று தோன்றும். அப்படி இருப்பவர்கள் ஆங்காங்கே சமையல் கட்டில் புதினா இலைகளை கசக்கி போட்டு விடுங்கள். ஒரு ஈ கூட அந்த இடத்தில் வரவே வராது.

- Advertisement -

5. மைக்ரோவேவ் அவன் வைத்திருப்பவர்கள் சின்ன வெங்காயம், பூண்டு உரிக்க இனிமேல் சிரமப்பட தேவையில்லை. அவனில் இருபது வினாடிகளுக்கு பூண்டையும், முப்பது வினாடிகளுக்கு சின்ன வெங்காயத்தையும் வைத்து விட்டு பின் எடுத்து உரித்து பார்த்தால் சுலபமாக உரிந்து விடும்.

microwave

6. ஒரு சிலருக்கு சமையலில் தேங்காய் சேர்த்தால் பிடிப்பதில்லை. தேங்காய் பிடிக்காதவர்கள் குழம்பு, பொரியல், குருமா என்று அனைத்திற்கும் தேங்காய்க்கு பதில் கசகசா பொடியாக்கி சேர்த்தால் உணவு வகை அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போல ஒவ்வொரு விஷயத்தில் இருக்கும் ரகசியத்தை தெரிந்து கொண்டால் சமையல் கலையில் நீங்களும் வல்லவர்களாக மகுடம் சூடலாம்.

இதையும் படிக்கலாமே
இப்படி ஒரு வாழைக்காய் வருவலை, உங்கள் வாழ்நாளில் சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க! செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் ஃப்ரை எப்படி செய்வது? இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -