சூப்பர் ரவா இட்லி செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் தான். 2 பொருள் போதும். சட்டுனு ரெடி பண்ண கூடிய, சூப்பர் டிஃபன் இது! மிஸ் பண்ணாம பாத்து தெரிஞ்சுக்கோங்க!

rava-idli2
- Advertisement -

எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளை நம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மன திருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்கு இது புடிக்கும். ஆனா ஹோட்டல்ல போய் தான் சாப்பிட முடியும். அப்படி இல்லன்னா கல்யாண வீடுகளில் சாப்பிட முடியும். நம்ம வீட்ல நம்ம கையால, சுடச்சுட ரவா இட்லி எப்படி செய்யறது? அதுவும் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி செய்யறதுன்னு இப்ப தெரிஞ்சுக்கலாமா?

ravai

Step 1:
ரவா இட்லி செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தெரிந்து கொள்வோம். ரவை – 1 கப், தயிர் – 1 கப், கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், முந்திரி – 4 பொடியாக உடைத்தது, பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன், சோடா உப்பு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, தேவையான அளவு உப்பு.

- Advertisement -

எந்தக் கப்பில் ரவையை, அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே கப்பில் கெட்டித் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். தயிர் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் பதத்தில் இருக்க கூடாது. தயிர் நீர்த்திருந்தால் இட்லி சரியான பக்குவத்தில் வராது.

Curd (Thayir)

Step 2:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி பருப்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி, தேங்காய் துருவலையும் போட்டு ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்கி, அதன் பின் தயாராக வைத்திருக்கும் ரவையையும் இந்த கலவையோடு சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை வறுத்து எடுத்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரவை கொஞ்சம் சூடு ஆறிய பின்பு, கெட்டித் தயிரை சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் ரவைக்கு தேவையான அளவு உப்பையும், கொத்தமல்லித் தழையையும் போட்டுக்கொள்ளுங்கள். 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

rava-idli-mavu

இப்போது இந்தக் கலவையை கரண்டியை வைத்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். தயிர் ஊற்றி கலந்த ரவை கலவையை, 1/2 மணி நேரம் மூடி போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள். மாவு ஊரியதற்குப் பின்பு, மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து, கட்டி பதத்தில் இருக்கும் மாவில் இட்லி வார்க்க வேண்டும்.

- Advertisement -

rava-idli-mavu1

Step 3:
இட்லி தட்டுகளில் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாக தடவிக் கொள்ளுங்கள். கெட்டிப் பதத்தில் இருக்கும் மாவை அள்ளி, இட்லி தட்டில் ஊற்ற வேண்டும். மொத்தமாக ஊற்றக்கூடாது. லேசாக ஊத்தனும். நிறைய மாவு ஊற்றிவிட்டால், ரொம்பவும் பெரியதாக உப்பி வந்துவிடும். சோடா உப்பு சேர்த்து இருக்கின்றோம் அல்லவா? சோடா உப்பு சேர்க்க வில்லை என்றால், இட்லியின் பக்குவம் சாஃப்ட்டாக இருக்காது என்பது குறிப்பிடதக்கது. சோடா உப்பு அவசியம் தேவை.

rava-idli

இட்லி சட்டியில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி விட்டு, கொதித்த பின்பு, தயாராக இருக்கும் இட்லி தட்டை, இட்லி சட்டியில் வைத்து மூடி விடுங்கள். முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடுங்கள். அதன்பின்பு, ஸ்டவ்வை சிம்மில் வைத்துவிட்டு 10 நிமிடம் வேக விட வேண்டும். மொத்தமாக 20 போதும் ரவா இட்லி சூப்பராக தயாராவதற்கு.

rava-idli1

இட்லி தட்டை வெளியே எடுத்த உடனேயே இட்லியை எடுத்துவிட்டால், கட்டாயம் இட்லி உடைந்து போக வாய்ப்பு உள்ளது. இட்லி நன்றாக ஆறிய பின்பு ஒரு ஸ்பூனை வைத்து, மெதுவாக எடுத்து பாருங்கள். சூப்பரா இருக்கும் இட்லி, நான் செய்த இட்லி தானா இது! என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இதனுடைய மனம் மூக்கைத் துளைக்கும். பசியை தூண்டும். சொல்லும் போது பசி எடுக்கிறது. கொஞ்சம கார சாரமான தேங்காய் சட்னி, கொஞ்சம் தக்காளி சட்னி, வைத்து சாப்பிட்டால் சூப்பரான டிஃபன் தயார். இன்னைக்கு நைட் ட்ரை பண்ணி பாக்குறீங்களா?

இதையும் படிக்கலாமே
அட குஷ்பு இட்லி செய்வது இவ்வளவு ஈஸியா? இத்தனை நாளா இந்த டிப்ஸ் தெரியாம போச்சே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -