1 கப் ரவை இருந்தால் போதும் சாஃப்டான ரவை இட்லி தயார் செய்து விடலாம்! ரவா இட்லியில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

ravai-idli-recipe
- Advertisement -

சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த ரவா இட்லி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். ஒரு கப் ரவா இருந்தால் போதும் மிகவும் ருசியான இட்லியை தயாரித்து விடலாம். பொதுவாக ரவா இட்லி செய்யும் போது ஒரு சில தவறுகளை செய்வது உண்டு. சரியான அளவுகளில், சரியான பொருட்களை வைத்து செய்யும் பொழுது ரொம்பவே மிருதுவான சுவையான ரவா இட்லியை தயார் செய்யலாம். அத்தகைய சுவையான ரவா இட்லி எப்படி செய்வது? என்பதை நாமும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

idli-rava1

ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 20, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், ரவை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, தயிர் – முக்கால் கப், கொத்தமல்லி தழை – சிறிதளவு, தண்ணீர் – ஒன்னேகால் கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன்.

- Advertisement -

ரவா இட்லி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரவா இட்லி செய்வதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்து வந்ததும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரிப் பருப்புகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதைத் தனியாக ஒரு தட்டில் வைத்து விட்டு மீதமிருக்கும் நெய்யில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

rava-idli-mavu

கடுகு நன்கு பொரிந்ததும் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு இஞ்சியை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது துருவியும் சேர்க்கலாம். இவைகளை நன்கு வறுத்த பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரே ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை எல்லாவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். இஞ்சி சுருள வதக்கி வர, கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள ரவை ஒரு கப் அளவிற்கு அளந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே கப்பில் தான் மற்ற பொருட்களை அளக்க வேண்டும். ரவை நன்கு வறுபட வேண்டும். ரவையின் மணம் ஆளை தூக்கும். மொறுமொறுவென்று ரவை வறுபடும் வரை வறுத்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ரவையை வறுக்காமல் சேர்த்தால் இட்லி நன்றாக வராது. நன்கு ரவை ஆறிய பின்பு ரவா இட்லிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

rava-idli

பின்னர் அதனுடன் முக்கால் கப் அளவிற்கு தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை தண்டுடன் சேர்த்து நறுக்குவது நல்லது. பின்னர் நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்த பின்பு ஒன்றேகால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பிறகு ஊறிய பின்பு ஒரு இட்லி பாத்திரத்தில் ரவையை ஊற்றி பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அவித்து எடுத்தால் மிகவும் சாஃப்டான ரவை இட்லி ரொம்பவே சூப்பராக தயாராகி விட்டிருக்கும். இதே போல நீங்களும் தயார் செய்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -