ரவா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்

rava-idly
- Advertisement -

அடிக்கடி இட்லி சாப்பிடும் நாம் சற்று அதிலே வேறுமாதிரியான இட்லியை சுவைக்கலாம் என்று எண்ணும்போது நம் நினைவிற்கு முதலில் வருவது ரவா இட்லி. இந்த பதிவில் ரவா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

rava 4

ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

ரவை – 1 கப்
எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிளை – சிறிதளவு
வெங்காயம் – 1/2 கப்
தயிர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
பேக்கிங் சோடா -சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

ரவா இட்லி செய்முறை:

- Advertisement -

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு அதனுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து கிளறவும். பிறகு இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை எடுத்து பொடியாக நறுக்கி அதனுடன் கலந்து கொள்ள வேண்டும்.

rava 3

பிறகு அதில் வெங்காயத்தினை கொட்டி கிளறி மேலும் அதனுடன் ரவை கொட்டி மிதமான சூட்டில் நன்றாக 2 நிமிடம் வரை வறுக்கவும். வறுபட்டவுடன் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ரவை ஆறியதும் அதனுடன் கெட்டியான தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும். பிறகு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதில் உப்பு, பேக்கிங் சோடா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

rava 2

பிறகு ஊறிய ரவையினை இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி 10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயார்.

rava 1

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
மொறு மொறு காராசேவ் செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rava idly recipe in Tamil. It is also called Rava idly ingredients in Tamil or Rava idly preparation in Tamil or Rava idly seimurai in Tamil or Rava idly seivadhu eppadi in Tamil.

- Advertisement -