- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்1/4 கப் ரவை இருந்தால் போதும் 5 நிமிடத்தில் சுவையான ரவை பாயாசம் இப்படிக் கூட...

1/4 கப் ரவை இருந்தால் போதும் 5 நிமிடத்தில் சுவையான ரவை பாயாசம் இப்படிக் கூட செய்யலாமே!

- Advertisement -

ரவை வைத்து நாம் உப்புமா கிண்டுவது, கிச்சடி கிண்டுவது அல்லது கேசரி செய்வது போன்ற விஷயங்களை தான் செய்து இருப்போம். ஆனால் ரவை வைத்து பாயாசம் கூட சுலபமான முறையில் ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். மிகவும் சுவை மிகுந்த இந்த ரவை பாயாசத்தை செய்ய அதிக பொருட்கள் கூட தேவையில்லை. வீட்டில் திடீரென வரும் விருந்தாளிகளுக்கு செய்து கொடுக்கவும், விசேஷ, வைபவ நாட்களில் நைவேத்தியம் படைக்கவும், இது சிறந்த தேர்வாக இருக்கும். பால் சேர்த்து செய்யப்படும் இந்த ரவை பாயாசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டால் ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ravai

ரவை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 15, ரவை – கால் கப், தண்ணீர் – அரை கப், பால் – அரை லிட்டர், சர்க்கரை – அரை கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

ரவை பாயாசம் செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். முந்திரி வறுபட்டதும் ஒரு கரண்டியால் முந்திரியை மட்டும் எடுத்து தனியே ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதே பேனில் மீதமிருக்கும் நெய்யில் கால் கப் அளவிற்கு ரவையை சேர்த்து நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.

rava-payasam

ரவை வறுபட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் பொழுது கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் ரவையுடன் சேர்ந்து கெட்டியான பதத்திற்கு வந்த பின்பு அரை லிட்டர் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த கெட்டியான பால் சேர்க்க வேண்டும். பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரிகளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். 5 நிமிடம் நன்கு கொதித்த பின் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பிறகு இரண்டு நிமிடத்திற்கு மீண்டும் கொதிக்க விடவும். நெய் தெளிந்து வந்ததும், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். உங்களுக்கு விருப்பம் என்றால் காய்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கலாம் அல்லது குங்குமப் பூ இருந்தால் சேர்க்கலாம்.

rava-payasam1

இது முற்றிலும் ஆப்ஷனல் தான், தேவை என்றால் சேர்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் விட்டு விடலாம். அவ்வளவுதாங்க! இப்போது அடுப்பை அணைத்து சுடசுட பரிமாற வேண்டியது தான். சுவை மிகுந்த இந்த ரவை பாயாசம் செய்வதற்கு மிகவும் சுலபமானதாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விருப்பம் போல் செய்து சமைத்து சாப்பிடலாம்.

சற்று முன்