வீட்டில் ரவையும் சர்க்கரையும் இருந்தால் போதுமே. சூப்பரான இந்த அப்பம் 5 நிமிடத்தில் தயார்.

rava-appam
- Advertisement -

சில சமயம் நமக்கு நாவிற்கு ருசி தரக்கூடிய இனிப்பு பலகாரம் ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றும். ஆனால் வீட்டில் சாப்பிட எதுவுமே இருக்காது. சமையலறையில் சர்க்கரையும் ரவையும் இதனுடன் சேர்க்கக் கூடிய இன்னும் சில பொருட்களும் கட்டாயமாக நம் வீட்டில் இருக்கும். அதை வைத்து வெறும் ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஒரு அப்பம் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஸ்வீட் அப்பம் அவ்வளவு ருசியாக இருக்கும் சாப்பிட. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பின் சொல்லக்கூடிய எல்லா பொருட்களையும் அளக்க உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அது டீ குடிக்கும் டம்ளராக இருந்தாலும் பரவாயில்லை. அதே கப்பில் தான் தண்ணீர் முதற்கொண்டு எல்லா பொருட்களையும் அளக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ரவை – 1 கப், மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை – 1 கப், உப்பு – 2 சிட்டிகை, தண்ணீர் – 2 கப், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு ஒரு கரண்டியை வைத்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். கையை வைத்து கரைத்துக் கொண்டாலும் தவறு கிடையாது. கட்டிகள் இருக்கக் கூடாது அவ்வளவுதான். நமக்கு தேவையான மாவு தயார். (தேவைப்பட்டால் 2 சிட்டிகை ஆப்ப சோடா, ஏலக்காய் தூள் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.)

தயார் செய்த இந்த மாவு ரொம்பவும் கட்டியாகவும் இருக்கக்கூடாது. தண்ணீர் ஆகவும் இருக்கக் கூடாது நாம் ஊற்றி இருக்கும் இரண்டு கப் அளவு தண்ணீர் போதுமானதாக இருக்கும். தேவைப்பட்டால் உங்களுடைய ரவை, மாவு கொஞ்சம் அதிகமாக தண்ணீர் இழுத்து விட்டது என்றால் இன்னும் கொஞ்சம் கால் கப் கூட தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான பேன் வைத்து அதில் இந்த அப்பத்தை பொருத்தி எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி விடுங்கள். எண்ணெய் மிதமான சூட்டில் காய்ந்ததும், இந்த அப்பத்தை ஒரு கரண்டியில் எடுத்து அந்த எண்ணெயில் வார்க்க வேண்டும். அப்பம் அப்படியே மேலே பொங்கி எழும்பி வரும். ஒரு பக்கம் பொன்னிறமாக சிவந்து வந்தவுடன் திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமாக சிவக்க விட்டு எடுங்கள். எண்ணெய் அவ்வளவாக குடிக்காது.

அப்பத்தில் எண்ணெய் அதிகமாக இருப்பது போல உங்களுக்கு தோன்றினால், அதை ஒரு டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்துவிட்டு பிறகு சாப்பிட்டுக் கொள்ளுங்கள். இந்த அப்பம் சுட்ட பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் ஆறிய பின்பு ருசித்துப் பாருங்கள். சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். மைதா மாவில் செய்யும்போது இந்த அப்பம் ஒரு சுவையை கொடுக்கும். கோதுமை மாவில் செய்யும்போது இந்த அப்பம் வேறொரு சுவையைக் கொடுக்கும். உங்களுக்கு எந்த மாவு விருப்பமோ அதை சேர்த்து இந்த அப்பத்தை ருசிக்க தவறவே தவறாதீர்கள். ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய சுவை தரும் இனிப்பு பலகாரம் எது.

- Advertisement -