தோசை செய்ய இனி அரிசி மாவு வேண்டாம். இந்த தோசையை உங்க வீட்லயும் ஒருவாட்டி செஞ்சுதான் பாருங்களேன்!

rava-dosa
- Advertisement -

நம்முடைய வீடுகளில் தோசை செய்ய வேண்டும் என்றால் உளுந்து அரிசி மாவு அரைத்து புளிக்க வைத்து தான் தோசை செய்வோம். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான முறையில் அரிசி சேர்க்காமல் ஒரு புதுவிதமான தோசையை புதுவிதமான ருசியில் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை காலை கொஞ்சம் வித்தியாசமாக இந்த தோசையை செய்து தான் பார்க்கலாமே.

ulunthu-venthayam-idly

3/4 கப் அளவு உளுந்தை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 1 மணி நேரம் ஊறிய உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு கெட்டிப் பதத்தில் அரைத்துக் கொள்ளவேண்டும். உளுந்து வடைக்கு மாவு அரைப்போம் அல்லவா? அந்த பதத்திற்கு அரைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

அடுத்தபடியாக உளுந்து அளந்த அதே கப்பில் 1 1/4 கப் அளவு ரவையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த ரவியோடு அரைத்த உளுந்து விழுதையும் போட்டு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு இந்த மாவை நன்றாக கரைத்து அப்படியே மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். உளுந்தை அளந்த அதே கப்பில் ரவை, தண்ணீர் அளந்து கொள்ளுங்கள் அப்போதுதான் மாவு பக்குவம் சரியாக வரும்.

idli-rava3

எட்டு மணி நேரம் கழித்து இந்த மாவு நன்றாக புளித்திருக்கும். இதை மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை, பொடியாக துருவிய இஞ்சி 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக கிள்ளிய வரமிளகாய் 2, கருவேப்பிலை இந்த பொருட்களை எல்லாம் தாளித்து மாவில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். இப்போது தோசை வார்ப்பதற்கு மாவு தயார்.

- Advertisement -

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ஒரு துணியை போட்டு நன்றாக தேய்த்து விட்டு அதன் பின்பு தயாராக இருக்கும் மாவை கரண்டியில் அள்ளி தோசைக்கல்லில் ஊத்தாப்பம் போல வார்க்க வேண்டும். ரொம்ப மெலிசாக வார்க்க முடியாது. மாவை வார்த்து லேசாக கரண்டிலேயே வட்ட வடிவத்தில் தள்ளி விடுங்கள். தேவையான எண்ணெயை ஊற்றி மேலே ஒரு மூடியைப் போட்டு மிதமான தீயில் வேக வையுங்கள். இந்த தோசைக்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக ஊற்றினால் தான் சுவை இருக்கும்.

rava-dosa1

சிறிது நேரம் கழித்து மூடியைத் திறந்து தோசையைத் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான வித்தியாசமான ரவை தோசை தயார். தேவைப்பட்டால் இந்த தோசையின் மேலே துருவிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை தூவியும் வேக வைத்து பரிமாறிக் கொள்ளலாம். மேலே பொடி தூவியும் ஊத்தப்பம் சுடலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி இருந்தாலும் போதும். அருமையான காலை உணவு அல்லது இரவு உணவு தயாராக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -