காலை, இரவு உணவாக சாப்பிட ரவை அடை செய்யும் முறை

ravai
- Advertisement -

காலை வேளையில் சிற்றுண்டி டிபன் அடை சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரத்தில் இது விரைவாக தயாராகும் ஒரு உணவு வகை என்று கூட சொல்லலாம். ஆம், 15 நிமிடங்களில் நீங்கள் அடையினை தயார் சேர்த்து சாப்பிட முடியும். இந்த பதிவில் 15 நிமிடத்தில் அடையினை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

ravai_1

ரவை அடை செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

வறுத்த ரவை – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
தயிர் – 1 கப்

ரவை அடை செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த ரவை மற்றும் அரிசிமாவு ஆகியவற்றை கொட்டி அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய தேங்காய், மஞ்சள்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும்.

- Advertisement -

ravai_2

பிறகு அதனுடன், சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இவை அனைத்துடனும் 1 கப் தயிர் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு நீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். 10 நிமிடம் இதனை ஊற வைக்கவேண்டும்.

ravai_3

இப்போது ரவை அடைக்கு தேவையான மாவு தயார். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி அதை தோசை கல்லில் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான ரவை அடை தயார்.

- Advertisement -

ravai_4

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
அவியல் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Ravai adai recipe in Tamil. It is also called as Ravai adai seimurai or Ravai adai seivathu eppadi in Tamil or Ravai adai preparation in Tamil.

- Advertisement -