சத்து மிகுந்த, சுவையான அவியல் செய்யும் முறை

aviyal
- Advertisement -

பொதுவாக அனைத்து திருமண மற்றும் அனைத்து சுபவிசேஷங்களில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு வகை அவியல். முற்றிலும் காய்கறி கொண்டு இது தயார் செய்யப்படுவதால் இது உடலுக்கு சக்தியை தரும் ஒரு உணவு வகை ஆகும். இப்போது சுவையான அவியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

aviyal_1

அவியல் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கத்திரிக்காய் – 4
முருங்கைக்காய் – 1
புடலங்காய் – சிறிய துண்டு
சேனைக்கிழங்கு – சிறிய துண்டு
வெள்ளபூசணி – சிறிய துண்டு
பீன்ஸ் – 5
வாழைக்காய் – சிறிய துண்டு
கேரட் – சிறிய துண்டு
கொத்தவரங்காய் – 4
மாங்காய் – சிறிய துண்டு
தேங்காய் எண்ணெய் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சைமிளகாய் – 3
சீரகம் – சிறிதளவு
பூண்டு – 1 பல்
உப்பு – தேவையான அளவு

அவியல் செய்முறை :

முதலில் அவியலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளவேண்டும் . பிறகு, கடாயை வைத்து முருங்கைக்காயை போடவேண்டும் பிறகு பீன்ஸ்,சேனைக்கிழங்கு,கேரட்,கொத்தவரங்காய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.

- Advertisement -

aviyal_2

பிறகு , தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பிறகு அரைத்த தேங்காயை வேகவைத்த காய்கறியுடன் கலந்து நன்றாக கிளறவேண்டும். பிறகு உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிரட்டவேண்டும்.

aviyal_3

பிறகு சிறிது நேரம் கழித்து இறக்கினால் சுவையான அவியல் தயார். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

- Advertisement -

aviyal_4

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
இடியாப்பம் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Aviyal recipe in Tamil. It is also called as Aviyal seimurai or Aviyal seivathu eppadi in Tamil or Aviyal preparation in Tamil.

- Advertisement -