வீட்டில் ரவை இருந்தால் போதும், அதை வைத்தே சாப்டான ரவை சப்பாத்தி செய்துவிடலாம்.

ravai chapati seivathu eppadi
- Advertisement -

இன்று பெரும்பாலான குடும்பங்களின் இரவு உணவாக சப்பாத்தி மாறிவிட்டது. வீட்டு பெண்கள் இந்த சப்பாத்திக்காக கோதுமை வாங்கி அதை சுத்தம் செய்து அரைத்து சப்பாத்தி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆனால் இதற்க்கு மாற்றாக அட்டகாசமான சுவையில், கோதுமை இல்லாமல் வெறும் ரவையை கொண்டு செய்யக்கூடிய ஒரு அருமையான ரவை சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வருக்காத பாம்பே ரவை – 1 கப்
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • நெய் – 4 ஸ்பூன்
  • தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதோடு 1 ஸ்பூன் எண்ணையும் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். பிறகு இதில் ரவையை கொட்டி நன்கு கிளற வேண்டும். எக்காரணம் கொண்டும் ரவை கட்டி கட்டியாக இருக்கக்கூடாது. அந்த அளவிற்கு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கிளறினால், கடாயில் உள்ள தண்ணீர் முழுவதையும் ரவை உறிஞ்சிவிடும்.

- Advertisement -

உடனே அடுப்பை அனைத்துவிட்டு கடாயை மூடி விடவும். கடாயில் இருக்கும் வெப்பத்திலேயே ரவை நன்கு பதமாக வெந்துவிடும். ஐந்து நிமிடங்கள் கழித்து கடாயில் உள்ள ரவையை நாம் சப்பாத்தி பிசைய பயன்படுத்தும் பாத்திரத்திற்கு மாற்றிக்கொண்டு சூட்டோடு சூட்டாக அப்படியே பிசைய துவங்க வேண்டும்.

ரவை மாவு சூடாக இருக்கும் என்பதால் அவ்வப்போது கையை தண்ணீரில் நனைத்து பிசைய வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் மாவில் தண்ணீரை சேர்க்க கூடாது. இப்படி தொடர்ந்து பிசைந்துகொண்டே வர சப்பாத்தி மாவு பதத்திற்கு இவை வந்துவிடும்.

- Advertisement -

அதன் பிறகு, இதை சப்பாத்தியின் கணத்திற்கு ஏற்றார் போல சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு சப்தியை தேய்க்க துவங்கலாம். இந்த சப்பாத்தி மாவு கட்டையில் ஒட்டாமல் இருப்பதற்காக உருண்டையில் அரிசி மாவை தொட்டு தேய்க்கலாம். அனைத்தையும் தேய்த்த பிறகு சப்பாத்தியை சுட துவங்கலாம்.

இதையும் படிக்கலாமே: தினமும் இட்லி தோசை பூரி பொங்கல் சாப்பிட்டு போர் அடிக்குதா? பேச்சுலர்ஸ் கூட சுலபமாக செய்யக்கூடிய இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

இந்த வகை சப்பாத்தியை சுடும்பொழுது எண்ணெய் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் சுவையை கூட்ட வேண்டும் என்று நினைத்தால் இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்துகொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான சாப்டான ரவை சப்பாத்தி தயார். இந்த ரவை சப்பாத்தி ரெசிபி வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு வித்யாசமான சுவை கொண்ட ருசியான சப்பாத்தியாக இருக்கும்.

- Advertisement -