வீட்டில் விசேஷ நேரங்களில் கண்டிப்பாக ஏதாவது ஒரு இனிப்பு செய்வோம். அது போன்ற சமயங்களில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது பாயாசம் தான். அதில் ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம், பால் பாயாசம் போன்றவை எல்லாம் நமக்கு தெரிந்தது தான். இவை அனைத்தையும் விட மிக மிக சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சட்டுனு என்று செய்யக் கூடிய ஒரு ரெசிபி தான் இந்த ரவை பாயாசம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ரவை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
ரவை -3 ஸ்பூன், காய்ச்சாத பால் – 3/4 லிட்டர், சர்க்கரை – 1/4 கப், நெய் – டேபிள் ஸ்பூன், முந்திரி -10, திராட்சை – 10, ஏலக்காய் -1/2 டீஸ்பூன்.
ரவை பாயாசம் செய்முறை விளக்கம்:
ரவை பாயாசம் செய்ய அடுப்பில் பேனை வைத்து சூடானவுடன் நெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நெய்யில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுபட்டவுடன் திராட்சையும் சேர்த்து வறுத்த பிறகு இதை தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அதே பேனில் ரவையை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். ரவை அதிகம் சிவந்து விடக் கூடாது. இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலந்து விடுங்கள். பால் ஒரு கொதி வரும் வரை அடுப்பை ஹை ப்ளேம்மில் வைத்து விடுங்கள். பால் கொதித்து வந்த உடன் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள். இதிலே ரவை முழுவதுமாக வெந்து விடும். அதன் பிறகு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து மீண்டும் ஒரு முறை நன்றாக கொதித்து பால் சுண்டிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்த சமயத்தில் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ரவை பாயாசம் நிமிடத்தில் ரெடி. இந்தப் பாயாசத்தில் குங்குமப் பூ சேர்க்க விருப்பமிருந்தால் சர்க்கரை சேர்த்தவுடன் குங்குமப்பூவை சேர்த்து கொள்ளலாம். அதே போல் கன்டென்ஸ் மில்க்கையும் சேர்த்து செய்தால் பாயாசம் இன்னும் நல்ல ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும். கன்டென்ட் மில்க் சேர்க்கும் பொழுது சர்க்கரையை முக்கால் கப்பிற்கு பதிலாக அரைக் கப் அளவு சேர்த்தால் போதும்.
இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு மாங்காய் இருந்தா அசத்தலான சுவையில் வித்தியாசமா இப்படி சட்னி செஞ்சு பாருங்க நீங்க வீட்டில் பாராட்டு வாங்குவது நிச்சயம்!
நிமிடத்தில் சுலபமான ரவை பாயாசம் தயாராகி விட்டது. இனி வீட்டில் அவசரத்திற்கு ஏதாவது ஒரு ஸ்வீட் செய்ய வேண்டும் என்றால், உடனே இந்த ரவை பாயாசை செய்து விடுங்கள். சீக்கிரமாகவும்,சுலபமாகவும் செய்வதோடு சுவையும் பிரமாதமாகவே இருக்கும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.