யோ-யோ டெஸ்ட்டை முதன் முறையாக கொண்டுவந்த போது என்னை வெறுத்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா – ரவி சாஸ்திரி

Ravi

இந்திய அணியை தேர்வு செய்வதில் தற்போது முக்கிய பங்கு வகிப்பது யோ-யோ டெஸ்ட் என்ற வீரர்களின் உடற்தகுதியினை சோதிக்கும் முறையாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்.

yo yo test

இந்த யோ-யோ டெஸ்ட் நடைமுறைக்கு வரும்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இதற்கு எதிப்பினை தெரிவித்தனர். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த யோ-யோ டெஸ்ட் முறையினை கட்டாயமாகியது.

இதைப்பற்றி ரவி சாஸ்திரி கூறியதாவது : நான் முதன் முதலில் யோ-யோ டெஸ்ட் முறையினை இந்திய அணிக்குள் கொண்டு வரும்போது இந்திய வீரர்களே எதிர்த்தனர். ஆனால், அதன்பிறகு வீரர்களின் உடற் தகுதி முக்கியம் என்று அனைவரும் கருதினர்.

இதன் மூலம் இந்திய அணியில் பிட்டான வீரர்கள் மட்டுமே இடம் பிடித்தனர். இதனால், இந்திய அணி பீல்டிங் மற்றும் அணியின் வேகம் போன்றவை அதிகரித்தது. இதனால் சீனியர் வீரர்களும் ஜுனியர் வீரர்களுக்கு அளவிற்கு வேகத்தினை காட்ட ஆரம்பித்தனர். இதனால் தற்போது உள்ள இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சமம் என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. முன்பு எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் எப்போது வீரர்களின் தெரிவில் இந்த முடிவினை ஏற்றுக்கொண்டனர் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

பெண்ணை ரேப் செய்த விடயத்தில் கைது செய்யப்பட்ட நியூசி வீரர் – தற்போதைய அணியின் ஆல்ரவுண்டர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்