உலகக்கோப்பை தொடரின் முடிவில் எனது பயிற்சியாளர் பொறுப்பு முடிகிறது. அடுத்து இதைத்தான் செய்ய போகிறேன் – ரவி சாஸ்திரி

Ravi
- Advertisement -

இந்திய அணிக்கு அனில் கும்ளே பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்ற பின் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் ரவி சாஸ்திரி. அவரது பயிற்சியாளர் பதவி வரும் உலகக்கோப்பை தொடர் வரை அவரது பதவிக்காலம் உள்ளது.

india

அதன்பிறகு என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு ரவி சாஸ்திரி அளித்த பதில் : இந்திய அணியில் நான் 2017ஆம் ஆண்டில் இருந்து நான் பயிற்சியாளராக பணிபுரிகிறேன். எனது பயிற்சி காலத்தில் இந்திய அணி சிறப்பாக வலுப்பெற்று இருக்கிறது என்றே நான் நினைக்கிறன்.

- Advertisement -

மேலும், நான் 23 ஆண்டுகள் வர்ணனையாளராக இருந்துள்ளேன். இன்னும் என்னால் 50 ஆண்டுகள் வர்ணனையாளராக இருக்க முடியும். ஆனால், அதற்கு அவசரம் எதுவும் தற்போது இல்லை எனவே, இந்திய அணிக்கு நான் தொடர்ந்து பயிற்சி அளிக்கவே விரும்புகிறேன்.

ravi

மேலும், நடந்து முடிந்த அனைத்தும் வரலாறு நடக்கப்போவது அனைத்தும் மர்மம் என்பதை நம்புபவன் நான். எனவே, எனது பயிற்சி காலத்தை வரலாறாக மாற்ற விரும்புகிறேன். இந்திய அணி இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக தொடருவதே என் விருப்பம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

வெலிங்டன் டி20 போட்டி இந்தியாவின் மிக மோசமான தோல்வியாக பதிவாகி உள்ளது – தோல்வி இதனால்தான் ஏற்பட்டது டிராவிட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -