வெலிங்டன் டி20 போட்டி இந்தியாவின் மிக மோசமான தோல்வியாக பதிவாகி உள்ளது – தோல்வி இதனால்தான் ஏற்பட்டது டிராவிட்

dravid

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்ய துவங்கியது.

Team

அதிரடியாக ஆடிய நியூசிலாந்து அணி முதலில் 219 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்தது. பிறகு ஆடிய இந்திய அணி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து டிராவிட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

டிராவிட் கூறியதாவது : இந்திய அணியின் டி20 போட்டிகளில் மிக மோசமான தோல்வியாக இந்த போட்டி பதிவாகியுள்ளது. 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டி தோல்வியில் முடிய காரணம் டாஸ். இதுபோன்ற சிறிய மற்றும் பேட்டிங்க்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதே நல்லது. அதனை தவிர்த்து ரோஹித் பந்துவீச முடிவ்வு செய்தது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

Tim seifert

மேலும், பீல்டிங் படுமோசமாக அமைந்தது. சரியான நேரத்தில் சரியாக கேட்ச் செய்து இருந்தால் அந்த அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருக்கலாம். எளிதான கேட்சுகளை கைவிட்டதால் நியூசிலாந்து அணி பெரிய இலக்கை நிர்ணயித்தது இதுவும் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று டிராவிட் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

தினேஷ் கார்த்திக்கே தோல்விக்கு முழுக்காரணம் – இணையத்தில் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்