சைவப் பிரியர்களுக்கு பலாக்காயில் அட்டகாசமான பிரியாணி ரெசிபி.

raw jack fruit briyani
- Advertisement -

பிரியாணியில் பலவகை உண்டு. இதில் சைவம் அசைவம் என வகை வகையாக இருக்கிறது. ஆனால் பலாக்காய் வைத்து பிரியாணி செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா. இதன் சுவையும் அதே போல தான் வித்தியாசத்துடன் அட்டகாசமாக இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

அரைக்க:
பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 இன்ச்
பூண்டு – 8 பல்
ஏலக்காய் -2
ஜாதி பத்திரி – 2
லவங்கம் -2
பட்டை -1

- Advertisement -

தாளிக்க:
வெங்காயம் – நான்கு ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி -2 ( நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
பலாக்காய் – 400 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கப்
தயிர் – 1/4 கப்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 3
கருவேப்பிலை -1 கொத்து
கொத்தமல்லி புதினா – ஒரு கைப்பிடி
எலுமிச்சை பழச்சாறு -1 ஸ்பூன்
எண்ணெய் -5 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

பலாக்காயை வாங்கி அதன் மேல் தோல்களை சீவிய பிறகு நடுவில் இருக்கும் தண்டு போன்ற பகுதியில் எடுத்து விட்டு சின்ன சின்னதாக நறுக்கி தண்ணீரில் போட்டு விடுங்கள். அடுத்து பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு, அரிசி முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு சின்னதாக நறுக்கி வைத்த பலாக்காயை தண்ணீர் இல்லாமல் வடித்து எண்ணெயில் போட்டு முக்கால் பாகம் வெந்தவுடன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், தயிர் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து 20 நிமிடம் வைத்து விடுங்கள்.

பிரியாணி செய்வதற்கு முன்பு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஏற்கனவே பலாக்காய் பொறித்த எண்ணெய்யில் பிரியாணி தாளிக்க தொடங்கலாம்.

- Advertisement -

எண்ணெய் சூடானவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை இவை எல்லாம் சேர்த்த பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்த விழுதையும் பச்சை மிளகாயும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதங்கிய பிறகு மஞ்சள் தூள் உப்பு ஏற்கனவே ஊற வைத்த பலாக்காய் அனைத்தையும் சேர்த்த பிறகு எலுமிச்சை சாறு, கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

இப்போது ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன், ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்து கொதி வந்ததும் பாத்திரத்தை காற்று புகாதவாறு மூடி போட்டு மூடுங்கள். அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அடுப்பை லோபிளேமில் 10 நிமிடம் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முருங்கை பூ இருந்தா இத செய்யுங்க செய்த உடனே காலி ஆயிடும்.முருங்கை பூ இருந்தா இத செய்யுங்க செய்த உடனே காலி ஆயிடும்.

பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு அதன் பிறகு 10 நிமிடம் கழித்து மேலே இருக்கும் தண்ணீர் பாத்திரம் தட்டு அனைத்தையும் எடுத்த பிறகு நெய்யை சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு எடுத்தால் நல்ல கமகமவென்று வாசனையுடன் பலாக்காய் பிரியாணி தயார்.

- Advertisement -