கிராமத்து சுவையில் அட்டகாசமான பச்ச மாங்காய் சுட்ட ரசம்.

manga rasam
- Advertisement -

எந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் செய்யும் முறையை காட்டிலும் நம்முடைய பாரம்பர முறைகள் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் அதே உணவை கிராமத்தில் செய்வது ருசியாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இன்றைய சூழலில் நாம் அது போன்ற ஆரோக்கியமான பெரும்பாலான உணவு வகைகளை மறந்தே விட்டோம்.

அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் கிராமத்து சுவையில் ஒரு அருமையான ரசம் ரெசிபியை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். ரசம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த உணவு தான். முன்பெல்லாம் எந்த உணவை சமைத்தாலும் ரசம் நிச்சயம் இருக்கும். இப்போது அப்படியெல்லாம் செய்ய முடிவதில்லை என்றாலும் எப்போதாவது வைக்கும் ரசத்தை இது போல வைத்து பாருங்க இனி அடிக்கடி வைப்பீர்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சை மாங்கா – 1,
பூண்டு – 5 பல்,
இஞ்சி -1 துண்டு,
பழுத்த தக்காளி – 1, கருவேப்பிலை -1 கொத்து,
கொத்தமல்லி -1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 3,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் -1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

இந்த ரசம் செய்ய முதலில் மாங்காவை அடுப்பு தனலில் நன்றாக சூடு படுத்த வேண்டும். அதற்கு கேஸ் ஸ்டவ் மீது ஒரு இரும்பு வலை போன்ற கம்பியை வைத்து அதன் மேல் மாங்காய் வைத்து நன்றாக சூடு படுத்துங்கள். இந்த கம்பி இல்லை என்றால் இடிக்கி போன்ற ஏதாவது பொருளினால் இருக்க மாங்காயை பிடித்து சுட வேண்டும்.

- Advertisement -

அப்படி செய்யும் போது மாங்காய்யில் மேல் உள்ள பச்சை நிற தோல் முழுவதுமாக கருப்பு நிறமாக மாறும் வரை சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு இந்த மங்காவை சிறிது நேரம் சூடு ஆறும் வரை ஒரு தட்டில் வைத்து ஆற விடுங்கள். மாங்காய் நன்றாக சூடு ஆறிய பிறகு அதன் மேல் இருக்கும் தோலை எல்லாம் உரித்து தனியாக எடுத்து விட்டால் உள்ளே நன்றாக மாங்கா வெந்து கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சேலத்து ஸ்பெஷல் அலா புட்டு செய்வது எப்படி?

இதை ஒரு பவுலில் சேர்த்து கைகளாலே நன்றாக மசித்து கொள்ளுங்கள். இப்படி மசிக்கும் போதே கொட்டையை தனியாக வந்து விடும். அதை எடுத்து விட்டு இந்த பிசைந்த மாங்காவுடன் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -