நம்முடைய உடலுக்கு அறுசுவைகளும் நிச்சயம் தேவை. அதில் புளிப்பு காரம் இனிப்பு போன்றவற்றிற்கு பல வகைகளை நாம் சேர்த்துக் கொண்டாலும், இந்த கசப்பு துவர்ப்பு போன்றவற்றிற்கு ஒரு சில உணவுப் பொருட்கள் மட்டும் தான் உண்டு. ஆனால் அந்த ஒரு சில பொருட்களையும் நம் வீட்டில் உள்ளவர்களையும் குழந்தைகளையும் சாப்பிட வைக்க பெரும்பாடு பட வேண்டும். என்ன தான் அது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சொன்னாலும் அதன் சுவையை அவர்களால் ரசித்து உண்ண முடிவதில்லை இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல சுண்டக்காயை சட்னி செய்து கொடுத்த்தால் இனி உங்க வீட்ல இருக்கவங்களா சுண்டைக்காய் சாப்பிட வைக்க நீங்க சிரமப்படவே வேண்டாம். அவங்களாவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த சட்னி ரெசிபியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
செய்முறை
இந்த சட்னி செய்ய முதலில் சுண்டைக்காய் காம்பை நீக்கி லேசாக நசுக்கிய பிறகு தண்ணீரில் போட்டு ஒரு முறை அலசி எடுத்து விடுங்கள். இதன் மூலம் சுண்டைக்காயின் மேல் இருக்கும் மண் தூசு நீங்குவதுடன் கசப்பு தன்மை பாதிக்கு மேல் குறைந்து விடும்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடான பிறகு 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 5 காய்ந்த மிளகாய், 6 பல் பூண்டு, 1 மீடியம் சைஸ் வெங்காயத்தில் நறுக்கி அதையும் சேர்த்த பிறகு 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு முறை வதக்கி விடுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு நிறம் மாறும் வரை வதங்க வேண்டும்.
அதன் பிறகு நாம் அலசி வைத்த சுண்டைக்காயை இதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்த பின்பு 2 மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி அதையும் இதில் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக விடுங்கள். இந்த நேரத்தில் அனைத்தும் சாப்டாக வெந்து விடும். அதன் பிறகு இதை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மிக்ஸி ஜாரில் ஆற வைத்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்த பிறகு கால் கப் துருவிய தேங்காயும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி தனியாக எடுத்து வைத்து விடுங்கள். அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை சேர்த்த பின் அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள்.
நல்ல கம கமவென்று வாசத்தோடு அருமையான சுவையோடு சுண்டைக்காய் சட்னி தயார். இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற அனைத்திற்கும் வகைகளுக்கும் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். அது மட்டுமின்றி சுட சுட சாதத்துடன் இந்த சட்னியை வைத்து கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். இனி எப்போ சுண்டக்காய் வாங்கினாலும் இது போல செய்யுங்க கொஞ்சம் கூட மீறவே மீறாது.